யாரு இந்த டேவிட் ரஷ்? ஒரே நாளில் 15 ரெக்கார்டு! கின்னல் புத்தகத்தை நிரப்பும் சாதனை மன்னன்!

By SG Balan  |  First Published Aug 10, 2024, 11:12 PM IST

"சீரியல் ரெக்கார்ட் பிரேக்கர்" என்று பெயர் பெற்ற அமெரிக்கர் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.


கின்னஸ் உலக சாதனை அமைப்பு உலகளவில் தனிநபர்கள் செய்த பல சாதனைகளை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அந்த வகையில் ஒரு சிறப்பு அம்சமாக ஒரே நாளில் 15 சாதனைகளைப் படைத்த "சீரியல் ரெக்கார்ட் பிரேக்கர்" பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இடாஹோவைச் சேர்ந்த டேவிட் ரஷ் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளை முறியடித்துள்ளார். அவர் சமீபத்தில் லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்திற்குச் சென்று, தனது சாதனை விவரங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

Latest Videos

undefined

டேவிட் ரஷ் முதலில் ஒரு நிமிடத்தில் ஆப்பிள்களை அதிக முறை கடித்த சாதனையைப் படைத்தார். பின்னர் ஒரு டேபிள் டென்னிஸ் பந்தை இரண்டு பாட்டில் மூடிகளில் பத்து முறை மாற்றி மாற்றி ஏந்தி சாதனை படைத்தார். இதை வெறும் 2 நிமிடம் 09 வினாடிகளில் செய்துவிட்டார். பேஸ்ம்பாலை 30 வினாடிகளில் 125 முறை இரு கைகளால் மாற்றி மாற்றி தொடும் சாதனையையும் முறியடித்தார்.

மாதம் ரூ.44,900 சம்பளம்! 1,376 காலி பணியிடங்கள்! ரயில்வே பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

30 வினாடிகளில் சுவரில் வீசி ஏறியப்பட்ட டேபிள் டென்னிஸ் பந்துகளை அதிக முறை வாயால் கவ்விப் பிடிப்பது, ஒரு நிமிடத்தில் டேபிள் டென்னிஸ் பந்தை அதிக முறை சுவரில் அடித்தல் ஆகியவற்றிலும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

வெறும் 5.12 வினாடிகளில் காகித விமானத்தைச் செய்து பறக்கவிடும் சாதனையையும் செய்திருக்கிறார். ஒரு நிமிடத்தில் 29 முறை இலக்கை நோக்கி சாப்ஸ்டிக்குகளை எறிந்தும் சாதனை படைத்துள்ளார்.

30 வினாடிகளில் அதிக டி-ஷர்ட்கள் அணிவது; 10 டாய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைப்பது; அதிக அளவு தண்ணீரை 30 வினாடிகளில் கைகளால் தள்ளிவிடுவது, ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரா மூலம் மிக வேகமாக குடிப்பது போன்ற பல கின்னஸ் உலக சாதனைகளைச் செய்திருக்கிறார்.

யார் இந்த டி. வி. சோமநாதன்? மத்திய அமைச்சரவை செயலாளரான தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி!!

click me!