சமையல் கலைஞர் நினா கர்டிஸ் விருந்துக்கான மெனுவை வடிவமைத்துள்ளார். மாலையில் கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் ஜோசுவா பெல் வழங்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார். இந்தப் பயணத்தில் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறையாகும்; எந்த இந்தியப் பிரதமரும் இரண்டு முறை உரையாற்றவில்லை. உலகம் முழுவதும், மிகச் சிலரே அதைச் செய்திருக்கிறார்கள்..." என்று கூறியுள்ளார். வாஷிங்டன் டிசிக்கு செல்வதற்கு முன், பிரதமர் மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், அமெரிக்க அதிபரின் அழைப்பு, ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் வீரியத்தையும் உயிர்சக்தியையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் அளிக்கப்படும் சிறப்பான வரவேற்புகள் என்னென்ன? முக்கியத்துவம் என்ன?
"எனது அமெரிக்கப் பயணம் ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் நமது உறவுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். உலகளாவிய சவாலை சந்திப்பதில் ஒன்றாக செல்படுவதில் உறுதியாக இருப்போம்" என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்துக்காக சிறப்பாக சைவ மெனு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும், தென் கொரியா அதிபர் யூன் சுக் - இயோல் ஆகியோருக்கு அமெரிக்கா இதுபோன்ற விருந்தை நட்த்தி இருக்கிறது.
மோடியின் வருகையை முன்னிட்டு கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல தாவர உணவு சமையல் கலைஞர் நினா கர்டிஸ் விருந்துக்கான மெனுவை வடிவமைத்துள்ளார். மாலையில் கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் ஜோசுவா பெல் வழங்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கான இரவு விருந்து மெனுவை உருவாக்க, செஃப் கர்டிஸ் வெள்ளை மாளிகையின் சமையல் கலைஞர்கள் கிறிஸ் காமர்ஃபோர்ட் மற்றும் சூசி மோரிசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுகிறார். வியாழன் அன்று இரவு விருந்துக்காக வெள்ளை மாளிகைக்கு வரும் மோடியை அதிபர் ஜோ பிடன் வரவேற்பார். விருந்துக்குப் பின் பிரதமர் மோடி அதிபரின் விருந்தினராக வெள்ளை மாளிகையிலேயே அன்றைய இரவைக் கழிப்பார்.
இது என்ன கேலிக்கூத்து! கீதா பிரஸ் பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருதா? காங். கண்டனம்... பாஜக பதிலடி!