அமெரிக்காவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 4 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கோவிட் பெருந்தொற்று, பருவகால காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு மத்தியில், 4 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயாமாக்கி உள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகர சுகாதார ஆணையர் டாக்டர். அஷ்வின் வாசன் இதுகுறித்து பேசிய போது “ நகரின் 11 பொது மருத்துவமனைகள், 30 சுகாதார மையங்கள் மற்றும் ஐந்து நீண்ட கால பராமரிப்பு வசதிகள் ஆகியவற்றில் மீண்டும் முகக்கவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஒமிக்ரான் அலையைப் பார்த்தபோது, மிகப் பெரிய பிரச்சினைகள் மக்கள் நோய்வாய்ப்பட்டது மட்டுமல்ல, எங்களிடம் நிறைய முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் இப்போது இல்லை.. எனவே தற்போது சுகாதார பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.” என்று தெரிவித்தார்.
உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் இவை தான்..
அமெரிக்காவில் கோவிட்: சில முக்கிய தகவல்கள் :
இந்த இந்திய உணவு உலகின் மிக மோசமான உணவு பட்டியலில் உள்ளது...எது தெரியுமா..??