அதிகரிக்கும் QR குறியீடு மோசடி.. மக்களை எச்சரித்த அமெரிக்க அரசாங்கம்.. மோசடியை எப்படி தவிர்ப்பது?

By Ramya s  |  First Published Dec 13, 2023, 9:01 AM IST

அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி குறித்து அமெரிக்க அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது.


எந்தளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறி உள்ளதோ அதே அளவு அதுதொடர்பான சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, QR குறியீடு மோசடி என பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது பலரும் செலுத்துவதற்கும், உணவு மெனுக்களை ஸ்கேன் செய்வதற்கும் அல்லது மக்களுக்கான விவரங்களைப் பெறுவதற்கும் QR குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி குறித்து இந்திய காவல்துறை தொடர்ந்து மக்களை எச்சரித்து வருகிறது. QR குறியீடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை அணுகுவதற்கான சாதனங்களில் ஊடுருவுவதற்கு சைபர் குற்றவாளிகள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் இந்திய காவல்துறை  எச்சரித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் QR குறியீடு மோசடி இப்போது உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது, அமெரிக்க அரசாங்கம் தங்கள்  நாட்டிலுள்ள மக்களுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC)  QR குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், சைபர் கிரிமினல்கள் எப்படி மக்களை ஏமாற்றுகின்றனர் என்பது குறித்தும் பேசியுள்ளது.

அமெரிக்காவில் QR குறியீடு மோசடி எச்சரிக்கை: அரசாங்கம் என்ன சொல்கிறது

மக்களின் தகவல்களை திருடுவதற்கு சைபர் குற்றவாளிகள் QR குறியீடுகளுக்குள் ஆபத்தான இணையதள இணைப்புகளை மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்கிங் மீட்டர்களில் QR குறியீடுகளைப் பயன்படுத்துவதையும் அது சுட்டிக்காட்டுகிறது, இது பயனர்களிடமிருந்து தரவைத் திருட உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெலிவரி ஏஜெண்டு வடிவிலும் QR மோசடி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டெலிவரி செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறி, வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு விவரங்களைப் பகிரும்படி கேட்டுக்கொள்கிறார்கள், இதற்காக அவர்கள் QR குறியீட்டைப் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது அதில் பணத்தை திருடும் ஆபத்தான லிங்குகள் இருக்கலாம்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கலாம். இதே போல் உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் சிக்கல் இருப்பதாகக் கூறியும் இந்த மோசடியில் ஈடுபடலாம். 

QR குறியீடு மோசடிகளில் சிக்காமல் எப்படி தப்பிப்பது?

முதலில், நீங்கள் QR குறியீட்டை உண்மையான அல்லது நம்பகமான இடத்தில் ஸ்கேன் செய்கிறீர்கள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலான மோசடி செய்திகளில் எழுத்துப் பிழைகள் இருக்கும். எனவே எழுத்துப்பிழையுடன் இருக்கும் QR குறியீட்டை பெற்றால் கவனமாக இருக்க வேண்டும்..

பான், டிரைவிங் லைசென்ஸ், மெட்ரோ டிக்கெட்.. இன்னும் பலவற்றை வாட்ஸ்அப் மூலமாக பெறலாம்..

தெரியாத நபர்களிடம் இருந்து QR குறியீட்டைக் கொண்ட செய்தி அல்லது மின்னஞ்சலைப் பெறும் போது, அதை உடனடியாகச் செயல்பட சொன்னால் அதை செய்ய வேண்டும் இறுதியாக, பணம் பெறுவதற்குப் பதிலாக, பணத்தை அனுப்புவதற்கு உங்களை ஏமாற்றக்கூடிய கட்டண QR குறியீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

click me!