அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்பை அடித்து தூக்கும் ஜோ பிடன்.. நியூயார்க் மாநிலத்தில் கெத்து காட்டி அசத்தல்..!

By vinoth kumar  |  First Published Nov 4, 2020, 8:13 AM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் கட்டமாக வெளியான முடிவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 129 இடங்களிலும்,  டொனால்ட் டிரம்ப் 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் கட்டமாக வெளியான முடிவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 129 இடங்களிலும்,  டொனால்ட் டிரம்ப் 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டுப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில்  மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 129 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 92 இடங்கள் பெற்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க், மசாசூட்ஸ், நியூ ஜெர்சி, மேரிலாண்ட் மற்றும் வெர்மாண்ட் ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ஓக்லஹாமா, கெண்டகி, வெஸ்ட் விர்ஜினியா, இண்டியானா ஆகிய மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

நியூயார்க் மாகாணத்தில் மிக மிக மோசமான தோல்வியைத் டொனால்ட் டிரம்ப் தழுவினார். நியூயார்க்கில் 76% வாக்குகளைப் பெற்றார் ஜோ பிடன்; டொனால்ட் டிரம்ப்-க்கு வெறும் 23% வாக்குகளே கிடைத்தன. நியூயார்க்கில் ஜோ பிடன் பெற்ற வாக்குகளும் 10,06,362, டிரம்ப் 3,11,122 வாக்குகளும் பெற்றுள்ளார். 

click me!