தற்போது ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷியாவின் மோஸ்க்வா எனும் போர்க் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது.
இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியா தொடுத்துள்ள போர் 52வது நாளாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதிகளை விட்டு ரஷிய படைகள் வெளியேறிய நிலையில், உடல்கள் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும், பெரும்பாலான உடல்களில் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சிலர் தூக்கிலிட்டப்பதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர். தெருக்களில் கைவிடப்பட்ட நிலையிலும், தற்காலிகமாக புதைக்கப்பட்ட நிலையிலும் உடல்கள் கிடந்தாகவும், ஒவ்வொரு நாளும் அதிகமான உடல்கள், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் கீவ் பிராந்திய பகுதி காவல்துறை தலைவர் ஆண்ட்ரி நெபிடோவ் தெரிவித்துள்ளார். தற்போது ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷியாவின் மோஸ்க்வா எனும் போர்க் கப்பல் தீப்பிடித்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போரில் இதுவரை 500 பீரங்கிகள், 82 போர் விமானங்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை தங்கள் இழந்துள்ளதாகவும் ரஷ்யா சார்பில் கூறப்படுகிறது. தற்பொழுதும் கடலில் மூழ்கியுள்ள ரஷியாவின் இந்த பிரமாண்டமான போர்க்கப்பல் குறித்து உக்ரைன் தரப்பில் கூறும்போது, தங்கள் ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தான் இந்த கப்பல் தாக்கப்பட்டதாகவும், அதன் பின் எந்த தாக்குதலும் நடக்கவில்லை ஆனால், கப்பல் தீப்பற்றி எரிந்து மூழ்கிவிட்டது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.