china lockdown: சீனாவை மிரட்டும் கொரோனா: ஷாங்காய் நகரில் ஒரேநாளில் 23 ஆயிரம் பேருக்கு தொற்று

By Pothy Raj  |  First Published Apr 16, 2022, 10:55 AM IST

china lockdown:  சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3,590 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று கண்டறியப்பட்டது, 19,923 பேருக்கு அறிகுறியில்லாமல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 


சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வர்த்தக நகரான ஷாங்காய் நகரில் நேற்று ஒரேநாளில் மட்டும் 3,590 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று கண்டறியப்பட்டது, 19,923 பேருக்கு அறிகுறியில்லாமல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

கொரோனா தீவிரம்

Latest Videos

undefined

சீனாவில் கடந்த பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து கொரோனா தொற்று பரவத் தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலால் பெரிதாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்படாலே அனைவருக்கும் வந்துவிடும் சூழல் இருப்பதால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவருகிறது. சீனாவின் மக்கள் தொகையில் கால்பங்கு மக்கள் தொகை கொரோனா பரவலால் லாக்டவுனில் சிக்கித் தவிக்கிறார்கள்.

20ஆயிரம் பேர் பாதிப்பு

இதில் வர்த்தகநகரான ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பரவலால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மக்கள் லாக்டவுனில் சிக்கித் தவிக்கிறார்கள். தினசரி 20ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 

லாக்டவுன் நீடிப்பதால், தொழிற்சாலை உற்பத்தி, சப்ளை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 2 கோடி மக்கள் லாக்டவுனால் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். 

பாதிப்பு அதிகம்

ஷாங்காய் நகராட்சி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இணை இயக்குநர் வூ ஹூவான்யு கூறுகையி்ல் “ மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அந்த முடிவுகளைவிரைவாக வெளியிடாமல் தாமதம் செய்வதே தொற்று அதிகரிக்கக் காரணம். நியூலிக் ஆசிட்டில் பரிசோதனை செய்வது மிகப்பெரிய வேலை. சந்தேகத்துக்குரிய மாதிரிகளை தொடர்ந்து பரிசோதனை செய்ய  வேண்டும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதால், தாமதமாகிறது.

2-வதாக குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று இருந்தாலே அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் விரைவாகப் பரவி விடுகிறது” எனத் தெரிவித்தார்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள்தேவை என்பதில் சீன அரசு தீவிரமாக இருக்கிறது. இதனால் ஷாங்காய் நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் லாக்டவுனில் சிக்கியுள்ளன. 

உற்பத்தி பாதிப்பு

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூவோ லிஜெயின் கூறுகையில் “ சீன அரசு கடைபிடிக்கும் கொரோனா தடுப்பு கொள்கைகள், வழிமுறைகள் அனைத்தும் அறிவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள் கருத்துப்படி கடைபிடிக்கப்படுகிறது. சீன மக்களையும், வெளிநாடுகளில் இருந்து சீனாவில் வசிப்போரின் உடல்நலம், வாழ்க்கையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

சர்வதேச சமூகம், உலக சுகாதார அமைப்பு ஆகியவைகொரோனா தடுப்பில் தீவிரமாக உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட லாக்டவுனால் பல நிறுவனங்களில் உற்பத்தி தடைபட்டுள்ளது. ஜெர்மனியில் பல நிறுவனங்களுக்கு பொருட்களை அனுப்ப முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
 

click me!