ஷாக்..! சீனா அடுத்து ஆஸ்திரேலியாவை குறிவைக்கும் கொரோனா.. தாறுமாறாக எகிறும் பாதிப்பு..

By Thanalakshmi V  |  First Published Apr 15, 2022, 4:46 PM IST

சீனா, தென்கொரியாவை உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தாக்கம் மீண்டும் விஸ்ரூபமெடுக்கலாம் என்று உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன.
 


வேகமெடுக்கும் கொரோனா:

சீனா, தென்கொரியாவை உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தாக்கம் மீண்டும் விஸ்ரூபமெடுக்கலாம் என்று உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன.ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பினால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் தற்போது 4,35,700  பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதில் 126 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Latest Videos

undefined

இதனிடையே கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் சாராசரியாக 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் பெரும்பாலும் 30 - 40 வயது உள்ளோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் இறப்பவர்களில் சராசரி வயது 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஆஸ்திரேலியாவில் 69% மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

சீனாவில் பாதிப்பு:

சீனாவை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 3,472 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டும், 62 லட்சம் மக்கள் உயிர் இழந்தும் உள்ளனர். தொற்று கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பு - 1,74,868 ஆகவும் கொரோனா பலி - 24,878 ஆகவும் உள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஷாங்காயில் மட்டும் 3,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதை அடுத்து அங்கு கடுமையான ஊரடங்கு விதிகள் அமலுக்கு வந்துள்ளன.இதனால் சுமார் 25 மில்லியன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

அச்சத்தில் உலக நாடுகள்

இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.  இன்று ஒரே நாளில் 810 பேர் குணமடைந்துள்ளனர்.குணமடைவோரின் விகிதம் 98.76% ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனாவிற்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவிற்கு 11,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 விகிதமாக குறைந்துள்ளது. நாடுமுழுவதும் இதுவரை 186. 30 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: India Corona: ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு..

click me!