உக்ரைன் தாக்குதல்..? கருங்கடலில் முழ்கிய ரஷ்யாவின் மிக பெரிய போர் கப்பல்.. அதிர்ச்சியில் புதின்..

By Thanalakshmi V  |  First Published Apr 15, 2022, 3:54 PM IST

வெடிப்பொருள்களால் சேதமடைந்த ரஷ்யாவின் போர்கப்பல் மோஸ்க்வா  கருங்கடலில் முழ்கியதாக ரஷ்யா பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


வெடிப்பொருள்களால் சேதமடைந்த ரஷ்யாவின் போர்கப்பல் மோஸ்க்வா  கருங்கடலில் முழ்கியதாக ரஷ்யா பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா 7 வாரமாக போர் தாக்குதலை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்ய படை கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு 500 க்கும் மேற்பட்டவர்களை பிணை கைதிகளாக ரஷ்யா படையினர் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் நாட்டை விட்டு சுமார் 46 லட்சம் பேர் வெளியேறி மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.  

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து குண்டு மழைகளை ரஷ்யா பொழிந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டி வருகிறார். அதற்கு சாட்சியாக, புச்சா நகரங்களில் கொத்து  கொத்தாக கிடந்த சடலங்களின் புகைப்படங்கள் நெஞ்சை உலுக்கியது. உக்ரைன் - ரஷ்யா போரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் நேற்று கருங்கடலில் ரஷ்யாவின் போர் கப்பல் பயங்கர தீப்பிடித்து எரிந்தது. ரஷ்ய பாதுகாப்பு படையில் முக்கிய பங்காற்றி வந்த இந்த போர்கப்பல் மோஸ்க்வா, கருங்கடலில் போருக்கான ஆயுதங்கள் மற்றும் வீரர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் , கடுமையான சூறாவளி காற்றினால் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்து கடலில் முழ்கியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த போர்கப்பல், ரஷ்யாவின் கடற்படை தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி வந்தது. இந்நிலையில் தங்களது ஏவுகணை தாக்குதலால் தான் போர்கப்பல் தீப்பிடித்து சேதமடைந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது. போர்கப்பல் சூறாவளி காற்றினால் தீப்பிடித்ததால் சேதமடைந்து முழ்கியுள்ளதாக மட்டும் கூறியுள்ளது.

மேலும் போர்கப்பலில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களில் தீப்பிடித்ததால் தான், கப்பல் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பல் தீப்பிடித்ததும் அதிலிருந்த 500 க்கும் பேர் வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கருங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யா போர் கப்பலுக்கு உக்ரைன் ஏவிய  நெப்டியூன் ஏவுகணைகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அழித்துள்ளதாக உக்ரைன் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 6000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்திருந்தார். இதில் அதி நவீன ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள்,ராணுவ வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன. தற்போது வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் தனது தாக்குதலை மேலும் நீண்ட தூரத்திற்கு குறிவைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பற்றி எரியும் தீ... 500 பேர் வெளியேற்றம்... ரஷ்ய போர்க்கப்பலை துவம்சம் செய்த உக்ரைன்...!

click me!