48 பெண் நோயாளிகளிடம் பாலியல் சீண்டல்.. இந்திய வம்சாவளி டாக்டர் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 15, 2022, 8:52 AM IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா சிங்(72). ஸ்காட்லாந்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிகிச்சைப் பெற்ற பெண் ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சிகிச்சையின்போது தன்னிடம் கிருஷ்ணா சிங் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் தெரிவித்தார். 

48 பெண் நோயாளிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 72 வயது இந்திய வம்சாவளி மருத்துவர் குற்றவாளி என ஸ்காட்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பாலியல் சீண்டல்

Tap to resize

Latest Videos

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணா சிங்(72). ஸ்காட்லாந்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் சிகிச்சைப் பெற்ற பெண் ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் சிகிச்சையின்போது தன்னிடம் கிருஷ்ணா சிங் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் தெரிவித்தார். 

 48 பெண் நோயாளிகளிடம் அத்துமீறல்

இதுதொடர்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 35 ஆண்டுகளாக பெண் நோயாளிகளிடம் கிருஷ்ணா சிங் பாலியல் ரீதியாக அத்துமீறி வந்தது தெரியவந்தது. அந்நாட்டில் உள்ள வடக்கு லானா்க்ஷயா் பகுதியில் பணியாற்றியபோது இந்தச் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, காவல் நிலையம் மற்றும் சிகிச்சையளிக்க வீடுகளுக்குச் சென்றபோதும் பெண் நோயாளிகளிடம் அவர் அத்துமீறியதாக தெரிகிறது. மொத்தம் 48 பெண் நோயாளிகளிடம் அவர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. 

தீர்ப்பு

இதுதொடர்பான வழக்கு கிளாஸ்கோ உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கிருஷ்ணா சிங் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளது. சிறந்த மருத்துவ சேவைக்காக பிரிட்டிஷ் அரச விருதைப் பெற்றவா் கிருஷ்ணா சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!