இஸ்ரேலுக்கு உதவ போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!!

By Dhanalakshmi G  |  First Published Oct 9, 2023, 2:11 PM IST

இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய திடீர் தரை, கடல், வான்வழி தாக்குதலில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து இருந்தார். ஆனால் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


"பல அமெரிக்க குடிமக்கள் இறந்ததை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்" என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இந்த செய்தியை ஏஎஃப்பி உறுதிபடுத்தி இருந்தது. "பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்புவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் இருந்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருப்பதை காட்டுகிறது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இஸ்ரேல் நாட்டின் இரும்பு குவிமாடம் என்றால் என்ன? இதன் பணி என்ன?

போர் விமானங்களை தாங்கிச் செல்லும் யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர் ஃபோர்டு போர் விமானம் தாங்கியை கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி இருப்பதாகவும், மேலும் போர் விமானங்களில் பணியாற்றுவதற்கு வீரர்களை அனுப்பி இருப்பதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''அதிபர் பைடனுடன் ஆலோசித்த பின்னர் பிராந்திய தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்த படைகளை அனுப்புவதாக உறுதி அளித்தார். யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர் ஃபோர்டு போர் விமானம் தாங்கி மட்டுமின்றி ஏவுகணை தாங்கி கப்பல்கள் மற்றும் நான்கு வழிகாட்டுதல் ஏவுகணை அழிப்பான்களை அமெரிக்கா அனுப்பி இருக்கிறது. 

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு வெடிமருந்துகள் உட்பட கூடுதல் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகளை அமெரிக்க வழங்கும்" என்று ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்திய பின்னர், ஞாயிற்றுக் கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். மேலும், தற்போதைய சூழலை இஸ்ரேல் நாட்டின் எந்த எதிரிகளும் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள நினைக்கக் கூடாது என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

இசை விழாவை ரணகளமாக்கிய ஹமாஸ் பயங்கரவாதிகள்; 260 சடலங்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவி வருகிறது என்று ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே தற்போது நடந்து வரும் போரில் 1,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 700 பேரும், காசா பகுதியைச் சேர்ந்த 400 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து இருதரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

click me!