Breaking: கிறிஸ்துமஸ் விழா கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு..! 4 பேர் பலி..! மரண ஓலத்தில் அலறியடித்த மக்கள்..!

Published : Nov 22, 2025, 09:31 AM IST
Carolina

சுருக்கம்

வருடாந்திர விடுமுறை நிகழ்விற்காக நூற்றுக்கணக்கான குடும்பங்கள், குடியிருப்பாளர்கள் கூடி கிறிஸ்துமஸ் மரவிளக்கு ஏற்றும் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ​மர்ம நபர்களால் ​திடீரென துப்பாக்கிச் சூடு நடத்டப்பட்டது. அப்போது

வட கரோலினாவின் கான்கார்டில் கிறிஸ்துமஸ் மர விளக்கு ஏற்றும் விழாவில் திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பீதி ஏற்பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.

வருடாந்திர விடுமுறை நிகழ்விற்காக நூற்றுக்கணக்கான குடும்பங்கள், குடியிருப்பாளர்கள் கூடி கிறிஸ்துமஸ் மரவிளக்கு ஏற்றும் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ​மர்ம நபர்களால் ​திடீரென துப்பாக்கிச் சூடு நடத்டப்பட்டது. அப்போது போலீசார் பாதுகாப்புக்காக கூட்டத்தை விரட்டியடித்தனர். மக்கள் எல்லா திசைகளிலும் ஓடியதால் பீதி பரவியது. காவல்துறையினரும், அவசரகால மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

 

 

அதிகாரிகள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவில்லை. சட்ட அமலாக்கப் பிரிவு அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, விசாரணை தொடர்வதால் பொதுமக்கள் விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சந்தேக நபர் அல்லது நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் பல நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் காயமடைந்ததால் விடுமுறை மர விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி குழப்பத்தில் மூழ்கியது. இதனால் நிகழ்வு திடீரென முடிவுக்கு வந்தது என்று நகர அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மற்றவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். வடகரோலினா நகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி சர்ச் ஸ்ட்ரீட் மற்றும் கபரஸ் அவென்யூவில் நடைபெற்று வந்தது. இன்று அதே பகுதியில் நகரத்தின் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு திட்டமிடப்பட்டு இருந்தது.

நிகழ்சியின் வீடியோ காட்சிகளை போலீசார் சோதனை செய்து பல சாட்சிகளுடன் பேசி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் தெரிந்தவர்கள் 704-920-5027 என்ற எண்ணில் அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நிகழ்ச்சியின் வீடியோ அல்லது புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை காவல்துறையினரிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்