கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனுமதி இல்லை என ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைய ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனுமதி இல்லை என ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. மேலும் 3வது அலை வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதால், பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வருவோர் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் எடுத்திருக்க வேண்டுமென மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சர் உட்பட அலுவலகத்திற்கு வருகை தரும் மக்கள் வரை அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேநேரம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அலுவலகத்திற்கு வருபவர்கள், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும், மேலும் இந்த கட்டுபாடுகளில் இருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.