ஐநா மன்றத்தில் பாகிஸ்தானுக்கு மீண்டும் அவமானம்...!! காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள ஆலோசனை..!!

By Asianet TamilFirst Published Sep 11, 2019, 7:45 PM IST
Highlights

இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர அமைதியையும் உடன்பாட்டையும் ஏற்படுத்த வேண்டிய கடமை ஐநா மன்றத்திற்கு உள்ளது என்றார். பொதுவான மத்தியஸ்தம் என்பது ஐநா நடைமுறையில் உள்ள ஒரு கொள்ளை என்று கூறிய அவர் எங்கிருந்தாலும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஐநாவின் நிலைபாடு என்றார். 

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை  தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாகிஸ்தான சீனா உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் இந்தியா ஈடுபடுவதாக  ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. எனவே காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இரு நட்டிற்கும் இடையே மத்தியஸ்தன் செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.  

அதற்கான விசாரணை இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானின் புகாரை இந்தியா திட்டவட்டமாக  மறுத்துள்ளதுடன் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதைப்பற்றிப் பேச பாகிஸ்தானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்று ஐநா மன்றத்திலேயே பதிலடி கொடுத்துள்ளது. 

இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளரின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த  செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் காஷ்மீர் விவகாரம் இருநாடுகளாலும் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தானிடையே இவ்விவகாரத்தால் பதற்றம் நீடித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது என்று கூறிய அவர் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர அமைதியையும் உடன்பாட்டையும் ஏற்படுத்த வேண்டிய கடமை ஐநா மன்றத்திற்கு உள்ளது என்றார். பொதுவான மத்தியஸ்தம் என்பது ஐநா நடைமுறையில் உள்ள ஒரு கொள்ளை என்று கூறிய அவர் எங்கிருந்தாலும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஐநாவின் நிலைபாடு என்றார். 

இரு நாட்டு தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளிடையே இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட அனைத்து முயற்ச்சிகளையும் ஐநா எடுக்கும் என்றும், அதற்கு இரு நாட்டின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக ஐநா மன்றத்தின் பொதுச்செயலாளர், காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விவகாரம் என்று கருத்து கூறியிருப்பது  பாகிஸ்தானுக்கு இடித்துரைப்பது போல் அமைந்துள்ளது 
 

click me!