பெட்ரோலை விட அதிகமான பாலின் விலை... ரூ.140 ஆக அதிரடி உயர்வு... அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

By vinoth kumar  |  First Published Sep 11, 2019, 5:55 PM IST

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால் பெட்ரோலின் விலையை விட பாலின் விலைதான் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 113 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பால் லிட்டர் 140 ரூபாய் என விற்கப்படுகிறது. 


பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால் பெட்ரோலின் விலையை விட பாலின் விலைதான் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 113 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பால் லிட்டர் 140 ரூபாய் என விற்கப்படுகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர். 

Latest Videos

இந்நிலையில், பாகிஸ்தானில், மொகரம் பண்டிகை நாட்களில் பாலின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, அந்தச் சமயங்களில் பால், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டின் மொகரம் பண்டிகை நேற்று பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆனால், அங்கு ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பாலின் விலை அதைவிட அதிகரித்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, ஆலோசனை வழங்க, தங்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாக சமீபத்தில் பன்னாட்டு நிதியம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!