பெட்ரோல் விலையை மிஞ்சிய பால் விலை... ஒரு ​லிட்டர்ரூ.140! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

By sathish k  |  First Published Sep 11, 2019, 5:46 PM IST

பாகிஸ்தானில் பெட்ரோல் விலையைவிட பால்விலை, கற்பனை செய்ய முடியாத அளவுக்‍கு உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 113 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு​ லிட்டர் பால் 140 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது.


பாகிஸ்தானில் பெட்ரோல் விலையைவிட பால்விலை, கற்பனை செய்ய முடியாத அளவுக்‍கு உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 113 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு​ லிட்டர் பால் 140 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில​சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை பாகிஸ்தான் முறித்துக்‍ கொண்டது. இதனால் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்‍கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

மொஹரம் பண்டிகையின் போது பால், காய்கறி உள்ளிட்டவற்றின் விலை உயர்வது வாடிக்‍கையான நிலவரம். ஆனால், காய்கறிகள் விலை இருமடங்கு உயர்ந்துள்ள நிலையில், கராச்சி, சிந்த், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பெரிய மாகாணங்களில் ஒரு லிட்டர் பால் 120 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரையில் இன்று விற்பனையாவதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  விலை நிர்ணயிக்‍கும் அதிகாரம் படைத்த கராச்சி கமிஷனர், லிட்டருக்‍கு அதிக பட்ச விலை 94 ரூபாய் என நிர்ணயத்திருந்தும், அவரது விலைக்‍ கட்டுப்பாடு வரம்பையெல்லாம் மீறிவிட்டது பாகிஸ்தான் பால் விலை. 

இரு நாட்களுக்‍கு முன்னர் பெட்ரோல் லிட்டருக்‍கு 113 ரூபாய்க்‍கும், டீசல் லிட்டருக்‍கு 93 ரூபாய்க்‍கும் விற்பனையான நிலையில், பாலின் விலையோ இன்று 140 ரூபாய் என ஒரேயடியாக எகிறிவிட்டது.  இதனிடையே பால் விலையை கட்டுக்‍குள் கொண்டு வருவது குறித்து, பால் உற்பத்தியாளர்களுடன் கராச்சி மாகாண அரசு நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

click me!