உலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி...!! இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..??

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2019, 1:17 PM IST
Highlights

அமெரிக்கா,  பிரான்ஸ்,  ரஷ்யா,  சீனா ,  பிரிட்டன், போன்ற நாடுகள் நிரந்தர  உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர். இதில் உள்ள உறுப்பு நாடுகள் ஐநாவுக்கு ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை செலுத்தவேண்டும் அந்த தொகையை வைத்துதான்  ஐநாமன்றம்  இயங்க வேண்டும் என்பது விதி. இந்த நிலையில்  ஐநாவின் உறுப்பு நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் மட்டுமே கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தியுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

எப்போதும் இல்லாத அளவிற்கு ஐநா மன்றத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன்  அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

உலக நாடுகளின் அமைதிக்காகவும், சர்வதேச நாடுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவு மற்றும் பிணக்குகளை  தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளை கைதூக்கி விடுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் UNA எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை.  இந்த சபையால்  இவ் உலகத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த  பல பிரச்சனைகளுக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது.  இதுவரையில் உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அனைத்து நாடுகளின் நடுநாயகமாக உள்ள இந்த ஐநா மன்றமே அதற்கு காரணம்... இச்சிறப்பு வாய்ந்த இம்மன்றத்திற்கு இது போதாதகாலம் என்று சொல்லும் அளவிற்கு அதன் நிலை மாறியுள்ளது. சுமார் 193 நாடுகள் இம்மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளன, 

அமெரிக்கா,  பிரான்ஸ்,  ரஷ்யா,  சீனா ,  பிரிட்டன், போன்ற நாடுகள் நிரந்தர  உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர். இதில் உள்ள உறுப்பு நாடுகள் ஐநாவுக்கு ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை செலுத்தவேண்டும் அந்த தொகையை வைத்துதான்  ஐநாமன்றம்  இயங்க வேண்டும் என்பது விதி. இந்த நிலையில்  ஐநாவின் உறுப்பு நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் மட்டுமே கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தியுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால்  மற்ற நாடுகள் முறையாக தொகை செலுத்தாததால்,  ஐநா மன்றம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக ஐநாமன்றம் தெரிவித்துள்ளது.  அத்துடன் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போதிய நிதி இல்லாததால்  வார இறுதிநாட்களில் அலுவலகம் செயல்படாது என ஐநாமன்றம் அறிவித்துள்ளது. உலக ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட இச்சபை, உலக வல்லரசுகள் ,  பணம் குவிக்கும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சபை,  நிதி நெருக்கடியால் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற தகவல்  உலக நாடுகள் பலவற்றிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
click me!