வடகிழக்கு பிரேசிலில் உள்ள அமரன்டேவில் மருந்துக்கடை ஒன்றுக்கு கைகளில் துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் திடீரென உள்ளே நுழைந்தனர். முகத்தை ஹெல்மெட்டால் மூடிக்கொண்டு துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் ஒரு பெண்ணும் அந்த கடையில் மருந்து வாங்க நின்று கொண்டிருந்தார். அதனை கவனித்த மற்றொரு திருடன் அந்த பெண்ணிடம் சென்று உங்களது பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார்.
மெடிக்கலில் திருடச்சென்ற இடத்தில் கொள்ளையனை பார்த்து பயத்தில் கத்திய பெண்ணிற்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளதங்களில் வைரலாகி வருகிறது.
வடகிழக்கு பிரேசிலில் உள்ள அமரன்டேவில் மருந்துக்கடை ஒன்றுக்கு கைகளில் துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் திடீரென உள்ளே நுழைந்தனர். முகத்தை ஹெல்மெட்டால் மூடிக்கொண்டு துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் ஒரு பெண்ணும் அந்த கடையில் மருந்து வாங்க நின்று கொண்டிருந்தார். அதனை கவனித்த மற்றொரு திருடன் அந்த பெண்ணிடம் சென்று உங்களது பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறி பயத்தில் கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மற்றொரு திருடன் உங்களது பணம் வேண்டாம் என்று கூறிவிட்டு இந்த பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அவர் அமைதியான பின்பு அந்த இடத்திலிருந்து சுமார் 250 டாலர் பணம் மற்றும் சில மருந்துகளைத் திருடிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளதங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட சென்டிமென்ட் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.