இந்திய பெண்கள் மனதுவைத்தால் நாளைக்கே பொருளாதாரம் சீராகும்...!! உலக நிதியம் அதிர்ச்சி தகவல்..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 19, 2019, 11:45 AM IST

குறிப்பாக நிதித்துறையில் வங்கியல்லாத நிறுவனங்களை வங்கிகளுடன் இணைப்பதுடற் அதில் உள்ள பிரச்சனைகளை களைந்து ஒழுங்கு படுத்த வேண்டும். முக்கியமாக இந்தியா பொருளாதார  வளர்ச்சிக்கு உதவும் காரணிகளை ஊக்குவிப்பதுடன்,  இந்திய மக்கள் வளத்தின் மீது முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் இந்தியாவில் திறமை மிக்க புத்திசாலி பெண்கள் இருக்கிறார் அவர்களை வீட்டிலேயே முடங்க விடாமல் அவர்கள் அதிக அளவில் பணி செய்வது அவசியம்  


சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்க இந்தியா தனது நாட்டிலுள்ள புத்திசாலி பெண்களை வீட்டில் முடங்கவிடாமல் அவர்களை பணியாற்ற செய்வது அவசியம் என இந்தியாவிற்கு சர்வதேச நிதியம் அறிவுறுத்தியுள்ளது. 

Latest Videos

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது  மேலும் பங்குச் சந்தை தொடர்ந்து  சரிவை சந்தித்து வருகிறது, இந்தியாவில் முதலீடு செய்துள்ளவர்கள் மீண்டும் அதை திரும்பப்பெறும் யோசனையில் இருந்து வருகின்றனர்.  பொருளாதாரப் போட்டி தரவரிசை பட்டியலில் முன்பு இருந்ததைவிட 10 இடங்கள் பின்னோக்கி இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக உலகப் பொருளாதார கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம்  வெறும் 6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என சர்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குனர் கிருஸ்டாலினா ஜார்ஜிவா எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து உடனே அதை தீர்க்க வேண்டும், குறிப்பாக நிதித்துறையில் வங்கியல்லாத நிறுவனங்களை வங்கிகளுடன் இணைப்பதுடற் அதில் உள்ள பிரச்சனைகளை களைந்து ஒழுங்கு படுத்த வேண்டும். முக்கியமாக இந்தியா பொருளாதார  வளர்ச்சிக்கு உதவும் காரணிகளை ஊக்குவிப்பதுடன்,  இந்திய மக்கள் வளத்தின் மீது முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் இந்தியாவில் திறமை மிக்க புத்திசாலி பெண்கள் இருக்கிறார் அவர்களை வீட்டிலேயே முடங்க விடாமல் அவர்கள் அதிக அளவில் பணி செய்வது அவசியம்  என்றும் மற்ற நாடுகளைப் போல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவை சந்தித்துவருகிறது.  அதில் வங்கதேசம்,  நேபாளத்தை விட, இந்தியா பின்தங்கியுள்ளது.  உடனே  சீர் செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 
 

click me!