இந்தியா, சீனாவை எச்சரித்த ட்ரம்ப்..!! இனியும் நாடகம் பலிக்காது என அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2019, 8:45 AM IST
Highlights

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வளரும் நாடுகள் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது எனவும்,  இரு நாடுகளையும் இன்னும் வளரும் நாடுகள் பட்டியலில் வைத்துள்ள உலக வர்த்தக அமைப்பு என்ன மாதிரியான அமைப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் ஏன் சீனாவையும், இந்தியாவையும் வளரும் நாடாக இந்த அமைப்பு கருதுகிறது என கேட்டுள்ளார். 

இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் வளரும் நாடுகள் என தாங்கள் கருதவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தன் பரம எதிரியான சீனாவின் மீது   ஏகக் கடுப்பில் இருந்து வரும் அமெரிக்கா,  தற்போது இந்தியாவின் மீதும் அந்த வெறுப்பை காட்ட தொடங்கி உள்ளது. அதற்குக் காரணம் சமீபத்தில் சீன அதிபர் தமிழகம் வந்ததுதான்,  என சர்வதேச  அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  அதாவது உலக வர்த்தக அமைப்பின் பட்டியலில் மொத்தம் 164 நாடுகள் இடம் பெற்றுள்ளன.  அதில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வருகிறது.  இந்நாடுகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளால் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில்தான் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். 

அதாவது, இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வளரும் நாடுகள் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது எனவும்,  இரு நாடுகளையும் இன்னும் வளரும் நாடுகள் பட்டியலில் வைத்துள்ள உலக வர்த்தக அமைப்பு என்ன மாதிரியான அமைப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் ஏன் சீனாவையும், இந்தியாவையும் வளரும் நாடாக இந்த அமைப்பு கருதுகிறது என கேட்டுள்ளார்.  இதுதொடர்பாக  உலகவர்த்தக அமைப்பிற்கு அவர் கடிதம் ஒன்றையும்  எழுதியுள்ளார்.  அதில் நாங்கள்  சீனாவையும், இந்தியாவையும் வளரும் நாடாக கருதுவதில்லை.  வளரும் நாடுகள் என கூறிக்கொண்டு இந்தியாவும் சீனாவும் எங்களிடம் இருந்து பலவந்தமாக எங்களது செல்வத்தை பறித்து செல்கிறார்கள், இனிமேலும் இருநாடுகளும் வளரும் நாடுகள் என்று கூற முடியாது என கண்டித்துள்ளார்.  

உலக வர்த்தக மையம் வழங்கி வரும்  வளரும் நாடுகள் என்ற பெயரை பயன்படுத்தி, சலுகைகள் இனிமேலும் இருநாடுகளும் பெற கூடாது என அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாததே ட்ரம்பின் ஆதங்கத்துக்கு காரணம் எனப்படுகிறது
 

click me!