ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்! சீனா, பாகிஸ்தான் முடிவு என்ன?

Published : Jun 23, 2025, 04:57 PM IST
Israel - Iran conflict

சுருக்கம்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இந்த போரில் சீனா, பாகிஸ்தான் நிலைப்பாடு குறித்து பார்க்கலாம்.

Israel-Iran War UN Security Council Emergency Meeting: ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்க இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் அப்பாவி மக்கள் பலியாகி வரும் நிலையில், அமெரிக்காவும் இந்த போட்டில் களமிறங்கியது.

தீவிமடையும் இஸ்ரேல், ஈரான் போர்

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்கியது. ஈரான் போரை நிறுத்த வேன்டும். அந்த நாட்டுக்கு அமைதி மற்றும் பேரழிவு என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு,  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த நேரத்தில் பல நாடுகள் தாக்குதலை விமர்சித்து மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை ஆதரித்தது.

சீனா, பாகிஸ்தான் முடிவு என்ன?

ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதர்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்த திட்டத்தை கோரியதாக ஊடக அறிக்கைகள் மேற்கோள் காட்டின. தற்போது, ​​வரைவு எப்போது வாக்களிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மூன்று நாடுகளும் தங்கள் திட்டத்தை முன்வைத்ததாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர். தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் ஒன்பது வாக்குகள் தேவை. மேலும், அதை அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா அல்லது சீனா வீட்டோ உறுப்பினர் நாடுகள் செய்யக்கூடாது. ஆனால் வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு

ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா "ராஜதந்திரப் பாதையை மூட முடிவு செய்துள்ளது" என்று ஈரான் கூறியுள்ளது, இப்போது அதன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நேரம், முறை மற்றும் அளவை இராணுவம் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இராவானி, அமெரிக்கா தனது மூன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கிய பிறகு, "இந்தப் புதைகுழியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று போர் வெறி கொண்ட அமெரிக்க ஆட்சியை ஈரான் பலமுறை எச்சரித்துள்ளது" என்று கூறினார்.

ஈரானிய தூதர் உறுதி

ஈரானின் அணுசக்தி மையங்களைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா "ராஜதந்திரப் பாதையை மூட முடிவு செய்துள்ளது" என்றும், இப்போது ஈரானின் இராணுவம் எப்போது பதிலடி கொடுக்கப்படும், அதன் தன்மை என்னவாக இருக்கும், அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில், "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" என்று ஈரானிய தூதர் தெரிவித்தார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்

இந்நிலையில், அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஃபோர்டோ அணு உலையை மீண்டும் தாக்கியுள்ளது. டெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையையும், ஐஆர்ஐபி எனப்படும்அரசு தொலைக்காட்சி நிலையத்தையும் இஸ்ரேல் தாக்கியதாக இரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணுக்கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இரான் வெளியுறவு மந்திரி ரஷ்ய அதிபரை சந்தித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின் மூன்று அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் குண்டுவீசித் தாக்கியது. ஃபோர்டோ, நதான்ஸ், இஸ்ஃபஹான் அணுமின் நிலையங்கள் மீதுதான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பி2 ரக குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் வெற்றிகரமாக நடந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இரான் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் இன்னும் தாக்கப்பட வேண்டிய இடங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். சமாதானத்திற்கு இரான் தயாராகவில்லை என்றால், மற்ற இலக்குகளும் தாக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?