அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி?

Published : Feb 21, 2025, 03:18 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி?

சுருக்கம்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க சிறப்பு தூதருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்காவுடன் வலுவான முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உக்ரைன் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

கீவ் (உக்ரைன்): உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வியாழக்கிழமை கீவ் நகரில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் கீத் கெல்லாக்கை சந்தித்து போர்க்கள நிலைமை, உக்ரைனின் போர்க் கைதிகளை மீட்பது மற்றும் பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விவாதித்தார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் "வலுவான, பயனுள்ள" முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உக்ரைன் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கிய நொடியில் இருந்தே உக்ரைன் அமைதியை நாடி வருகிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார். அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான வலுவான உறவுகள் உலகிற்கு நன்மை பயக்கும் என்று வலியுறுத்தினார்.
X இல் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், "@SPE_Kellogg உடன் ஒரு பயனுள்ள சந்திப்பு நடந்தது. நல்ல விவாதம் மேற்கொள்ளப்பட்டு, முக்கிய விவரங்கள் பறிமாறப்பட்டன. உக்ரைனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் ஆதரவளிக்கும் அமெரிக்காவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவின் வலிமையை உணர வேண்டியது எங்களுக்கு முக்கியம். மேலும், முழு சுதந்திரம் உலகிற்கும் முக்கியம். போர்க்கள நிலைமை, எங்கள் போர்க் கைதிகளை எவ்வாறு மீட்பது மற்றும் பயனுள்ள பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


"இந்தப் போர் தொடங்கிய முதல் நொடியில் இருந்தே, உக்ரைன் அமைதியை நாடியது. அமைதி வலுவானதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ரஷ்யா மீண்டும் ஒருபோதும் போருக்கு திரும்பக் கூடாது. அமெரிக்க அதிபருடன் வலுவான, பயனுள்ள முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உக்ரைன் தயாராக உள்ளது. முடிவுகளை அடைய விரைவான மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான வழியை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். எங்கள் குழு 24/7 வேலை செய்ய தயாராக உள்ளது. வெற்றி நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. வலுவான உக்ரைன்-அமெரிக்க உறவுகள் உலகிற்கு நன்மை பயக்கும். முக்கியமான முடிவுகளை அடைய கூட்டுப் பணிக்கு ஜெனரல் கெல்லாக்கிற்கு நன்றி," என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.

'உக்ரைனே இருக்காது' டொனால்ட் டிரம்ப் ஆவேசம்! ஜெலென்ஸ்கி பதிலடி! முற்றும் மோதல்!
டிரம்ப்பின் தூதர் கீத் கெல்லாக்குடன் நடந்த சந்திப்பு குறித்து ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் பேசினார். உக்ரைனுக்கு உண்மையில் வேலை செய்யும் "அமெரிக்காவுடன் வலுவான ஒப்பந்தங்கள்" தேவை என்றும் அவர் கூறினார். விரைவாகவும் விவேகமாகவும் செயல்பட தனது குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் கூறினார்.


உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பேசி இருந்தார். அப்போது, ''உக்ரைன் அதிபரை குறிவைத்து, ஐரோப்பாவை விட அமெரிக்கா 200 பில்லியன் டாலர் அதிகமாக உக்ரைனுக்கு செலவிட்டுள்ளது. ஆனால், ஐரோப்பாவுக்கு நிதி பங்களிப்பு "உத்தரவாதம்" இருந்தது. ஆனால், அமெரிக்காவுக்கு எந்த வருமானமும் இல்லை'' என்று டிரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி மற்றும் டிரம்ப்பின் தூதருக்கு இடையிலான சந்திப்பு நடந்துள்ளது. 


ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்த டிரம்ப், "யோசித்துப் பாருங்கள், ஒரு மிதமான வெற்றிகரமான நகைச்சுவை நடிகர், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. அமெரிக்காவை 350 பில்லியன் டாலர்கள் செலவிடச் செய்தார். அமெரிக்கா மற்றும் "டிரம்ப்" இல்லாமல் அவரால் எதையும் தீர்மானிக்க முடியாது" என்று எழுதினார்.


மேலும் டிரம்ப் தனது நிர்வாகம் மட்டுமே ரஷ்யாவுடனான போரை வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும் என்று வலியுறுத்தினார். உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அதே வேளையில், ஜெலென்ஸ்கியின் மோசமான நிர்வாகம் ஒரு "சிதைந்த" நாட்டிற்கும் மில்லியன் கணக்கான தேவையற்ற மரணங்களுக்கும் வழிவகுத்தது என்று டிரம்ப் கூறினார். மேலும், உக்ரைன் என்ற ஒரு நாடே இருக்காது என்றும் மிரட்டல் விடுத்தார். 


டிரம்ப் மேலும் கூறுகையில், "ரஷ்யாவுடனான போரை வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வருகிறோம், அதை "டிரம்ப்" மற்றும் டிரம்ப் நிர்வாகம் மட்டுமே செய்ய முடியும் என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பைடன் ஒருபோதும் முயற்சிக்கவில்லை, ஐரோப்பா அமைதியைக் கொண்டு வரத் தவறிவிட்டது. நான் உக்ரைனை நேசிக்கிறேன், ஆனால் ஜெலென்ஸ்கி ஒரு மோசமான வேலையைச் செய்துள்ளார். அவரது நாடு சிதைந்துள்ளது. மேலும் மில்லியன் கணக்கானோர் தேவையற்ற முறையில் இறந்துவிட்டனர்'' என்று தெரிவித்துள்ளார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!