இந்திய பிரதமர் மோடியிடம் சென்று முறையிடுங்கள்..! உக்ரைன் அமைச்சர் வெளியிட்ட ‘அதிர்ச்சி’ வீடியோ !!

By Raghupati R  |  First Published Mar 6, 2022, 8:57 AM IST

உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. 


இந்நிலையில் போர் நிறுத்ததை ரஷிய படைகள் மீறுவதாகவும்,  மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பு பாதை அமைப்பது மறுக்கப் படுவதாகவும் மரியுபோல் நகர மேயர் வாடிம் பாய்சென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.  

அந்த நகரம் முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது, அதே நேரத்தில் 4 லட்சம் நகரவாசிகள் ரஷிய படையினரால் பிணைக் கைதிகளாக வைக்கப் பட்டுள்ளனர் என்றும், தி கீவ் இன்டிபென்டன்ட் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் மரியுபோல் நகர் மீது போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக பொதுமக்களை வெளியேற்றுவது ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் மேயர் அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடவடிக்கைகளை மாஸ்கோ மீண்டும் தொடங்கி உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியஅவர், ‘புதின், உக்ரைனை விட்டு விடுங்கள். இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள். ரஷியர்களின் உயிரைக் காக்க, இந்த ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. 

ஏற்கனவே 113 நிறுவனங்கள் ரஷியாவில் உங்களுடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. அவர்களின் முடிவுகளை நான் பாராட்டுகிறேன். ரஷியப் படைகள் மனிதாபிமான தாழ்வாரங்களை ஏற்பாடு செய்வதற்காக காலையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறியது. வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம்.

உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாகவும், அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும், அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டி இந்த நாடுகளின் அனுதாபத்தைப் பெற ரஷியா முயற்சிக்கிறது. 30 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் வரவேற்பு இல்லமாக  உக்ரைன் இருந்தது. 

வெளிநாட்டு மாணவர்களின் இயக்கத்தை எளிதாக்க, உக்ரைன் ரெயில்களை ஏற்பாடு செய்தது. ஹாட்லைன்களை அமைத்தது. தூதரகங்களுடன் வேலை செய்தது. உக்ரைன் அரசு தன்னால் முடிந்ததைச் செய்துவருகிறது. இந்தப் போர் அனைவரின் நலனுக்கும் எதிரானது என்பதை விளக்கி புதினைத் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ரஷியா மக்களும் இந்தப் போருக்கு ஆர்வம் காட்டவில்லை.இந்தியாவுடன் சிறப்பு உறவுகளைப் பேணி வரும் அனைத்து நாடுகளும் பிரதமர் மோடியிடம் முறையிட்டு, இந்த போரை நிறுத்த புடினைத் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுங்கள்’  என்று கூறினார்.

click me!