Russia Ukraine War: ’போர் வேண்டாம்’ என்று நினைக்கிறோம்..ஆனால் உக்ரைன் தான் முட்டுக்கட்டை.. புதின் பகிரங்கம்

By Thanalakshmi V  |  First Published Mar 5, 2022, 10:23 PM IST

உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே ரஷ்யா விரும்புவதாக, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  ஆனால் அதற்கு உக்ரைன் அதிபர் முட்டுகட்டையாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
 


நேட்டோ இராணுவ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராக சேர கூடாது என்று தொடர்ந்து எச்சரித்த வந்த நிலையில் நாட்டின் எல்லைகளில் படைகளையும் குவித்து வந்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் போர் தாக்குதலை தொடங்கும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சொல்லி வந்தனர். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது இராணு நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். உடனே எல்லைகளில் தயாராக இருந்த ரஷ்ய இராணுவ படைகள், உக்ரைன் மீது வான்வழித்தாக்குதல் நடத்தினர். தலைநகர் கீவ் யில் தொடந்து குண்டு மழைகள் பொழிந்தன.

இதனிடையே கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ், மரியுபோல், கீவ், கார்கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியது. கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் ரஷ்ய படைகள் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இரு நாடுகளும் அங்கு சிக்கியுள்ள மாக்களை மீட்பதற்காக , போர் நிறுத்தம் செய்யுமாறும் இந்தியா தொடர்ந்து கடுமையாக வலியுறுத்தி வந்தது. அதே நேரம் பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் போர் நிறுத்தம் செய்யலாம் என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டன. 

உக்ரைனின்  மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யப் படை, மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை சுற்றி வளைத்து,தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.இதன் மூலம் உக்ரைனுக்கு கடல்வழியாகக் கிடைக்கும் உதவிகள் இனி தடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளான க்ரீமியா, டான்பாஸில் இருந்து மரியுபோல் வழியாக தடையின்றி ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நூழையலாம்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், தொடர் தாக்குதால் பாதிக்கப்பட்ட கார்கிவ் நகரில் சிக்கியுள்ள வெளிநாட்டினை சேர்ந்தவர்களை மீட்க ரஷ்ய இராணுவம் தயாராக இருக்கிறது. நால் ஆனால், உக்ரைன் ராணுவம் அதை தடுப்பதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், நேட்டோ படைகளுக்கும், தங்களுக்கும் இடையே மோதலை தூண்டிவிடவே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முயற்சி செய்வதாக ரஷ்ய அதிபர்  விமர்சித்துள்ளது.

மேலும் உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே ரஷ்யா விரும்புவதாகவும், ஆனால், தீர்வு காண விரும்பினாலும் உக்ரைன் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  மேலும், ரஷ்ய மீதான பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் அதனால் எங்களை தனிமைப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

click me!