Russia Ukraine War: போரை திசை திருப்ப முயற்சி..உக்ரைன் தான் தூண்டிவிடுகிறது..ரஷ்யா தடாலடி..

By Thanalakshmi V  |  First Published Mar 5, 2022, 7:23 PM IST

கார்கீவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும் அதனை உக்ரைன் ராணுவம் தடுக்கிறது என்று ரஷ்யா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
 


உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. 9 நாட்களாக போர் நடைபெற்று வந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா இராணுவம் தாக்குதலை தொடங்கியது. வான்வழி , தரைவழி மூலம் கடுமையான தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளது. குறிப்பாக தலைநகர் கீவ்யில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வந்தது. உக்ரைன் மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 10 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 

மேலும் உக்ரைன் நாட்டில் விமானப்படை தளம், இராணுவ தளம், துறைமுக நகரம் உள்ளிட்டவை கைப்பற்றி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள் , மருத்துவமனைகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்களான கார்கீவ், கீவ், கெர்சன் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளது ரஷ்ய படை. ரஷ்யா உக்ரைன் மீது இணையத் தாக்குதலும் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் இணையச் சேவைகளை ரஷ்யா முடக்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கார்கீவ், கீவ், கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியது.  உக்ரைனின் ஜாபோரிசியா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யப் படை, மரியுபோல் என்ற துறைமுக நகரத்தை சுற்றி வளைத்துள்ளது. இந்த நகரை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், உக்ரைனுக்கு கடல்வழியாகக் கிடைக்கும் உதவிகள் இனி தடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் க்ரீமியா, டான்பாஸில் இருந்து மரியுபோல் வழியாக தடையின்றி ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நூழையலாம். 

மேலும் படிக்க: Russia Ukraine War: இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து வெளியேற வேண்டாம்..எச்சரித்த இந்திய வெளியுறவுத்துறை..

இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் ரஷ்ய படைகள் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது. இதனிடயே பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. 

இந்நிலையில், கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும், அதனை உக்ரைன் ராணுவம் தடுக்கிறது என்று ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மோதலை தூண்டிவிடப்பார்க்கிறார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் தங்கள் நாட்டை தனிமைப்படுத்த முடியாது என்று ரஷ்யா தெரித்துவித்துள்ளது.

முன்னதாக , ரஷ்ய விமானங்கள் நடத்தும் வான் வழித் தாக்குதலை நிறுத்த உக்ரைன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் நேட்டோவிடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதே வேளை, நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் விமானப் பாதுகாப்புக் காரணமாக உக்ரைன் வான்வழியில் பறக்க வேண்டாம் எனத் தடை விதித்தது.நேட்டோவின் இந்த அறிவிப்பு உக்ரைன் மீது ரஷ்யா நேரடியாக ஆக்கிரமிப்பைத் தொடர அனுமதிக்கும் செயலாகவே இருக்கிறது என்றும் போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டுவதாக இருக்கிறது என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றச்சாட்டிருந்தார்.

click me!