Russia Ukraine War: முதல் முறையாக திருப்பி அடித்த உக்ரைன்.. முக்கிய இடத்தில் பயங்கர தாக்குதல்..கதறிய ரஷ்யா

By Thanalakshmi V  |  First Published Apr 1, 2022, 9:26 PM IST

உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தாக்குதலை தொடங்கி ஒரு மாதம் தாட்டியுள்ள நிலையில், முதல் முறையாக ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தி, அழித்துள்ளது.
 


நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது  பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. இன்றுடன் 37 நாட்கள் எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்ய படை வான்வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் போர் தாக்குதலில் உக்ரைன் நாடே உருகுலைந்துள்ளது. கீவ், கார்கீவ், சுமி, கெர்சன், மரியுபோல், லிவிவ் உள்ளிட்ட நகரங்களில் இடைவிடாது குண்டு மழைகளை ரஷ்ய இராணுவம் பொழிந்து வருகிறது. இதுவரை போர் காரணமாக உக்ரைனிலிருந்து சுமார் 40 லட்சம் மக்கள் வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றில் இந்த அளவுக்கு அகதிகள் வெளியேறுவது இதுவே முதன்முறை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தாக்குதலை தொடங்கி ஒரு மாதம் தாட்டியுள்ள நிலையில், முதல் முறையாக ரஷ்ய எல்லைக்குள் இருக்கும் எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெல்கொரோடு நகரத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் கிடங்கைக் குறிவைத்து உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்தக் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலே மிக பெரிய அணு உலையான உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலைப் பகுதியிலிருந்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யப் படைகள் தற்போது விலகியுள்ளன. இதனால் அந்தப் பகுதி மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா பாதுகாப்புதுறை அமைச்சகம், உக்ரைனில் என்ன நடக்கிறது என்ற முழு விவரத்தை ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய ராணுவம் முழுவதுமாக தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனை ரஷ்ய தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதேவேளையில், தங்கள் மீது பல்வேறு தடைகளையும் விதித்துள்ள மேற்கத்திய நாடுகளுக்கு கோதுமை உள்ளிட்ட விளை பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. ரஷ்யா உலகிலேயே கோதுமை ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கீவ்வை கைபற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைன் - ரஷ்யா இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், துருக்கி இஸ்தான்புல்லில் அண்மையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!