டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்குவது கிரிமினல் குற்றம்! பிரிட்டனில் அதிரடி சட்டம்!

By SG BalanFirst Published Apr 16, 2024, 3:56 PM IST
Highlights

AI தொழில்நுட்பம் அதிநவீனமாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அதன் பயன்பாடு எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கிறது. பிரிட்டன் கொண்டுவருவது போன்ற சட்டக் கட்டுப்பாடுகள் ஆன்லைனில் டீப்ஃபேக் ஆபாசப் படங்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் அனுமதியின்றி அவரை ஆபாசமாகச் சித்தரிக்கும் டீப்ஃபேக் போட்டோ அல்லது வீடியோக்களை உருவாக்குவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை பிரிட்டன் அரசு கொண்டுவர உள்ளது.

அனுமதியின்றி இதுபோன்ற டீப்ஃபேக் படங்களை உருவாக்கியவர்கள் அவற்றைப் பகிராமல் இருந்தால்கூட இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என இந்தச் சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், டீப்ஃபேக் ஆபாசப் படத்தை பரப்பினால் அதை உருவாக்கியவர் சிறையில் அடைக்கப்படலாம் எனவும் இந்தச் சட்டம் கூறுகிறது.

இதற்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு குற்றவியல் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்துக் கூறும் அமைச்சர் லாரா ஃபாரிஸ், "டீப்ஃபேக்குகளை உருவாக்குவது ஒழுக்கக்கேடானது, வெறுக்கத்தக்க குற்றம் என்று இந்தச் சட்டம் தெளிவுபடுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இயல்பைவிட அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

இந்தச் சட்டம் இங்கிலாந்தில் இணைய பாலியல் சுரண்டலுக்கு எதிரான சட்டப் பாதுகாப்பின் நோக்கத்தை விரிவுபடுத்த முயல்கிறது. முன்னதாக, நவம்பர் 2022 இல், ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவின் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அப்போது, டீப்ஃபேக் படங்களை சம்பந்தப்பட்டவரின் சம்மதம் இல்லாமல் பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். முதல் முறை இந்தக் குற்றத்தில் ஈடுபட்டாலும் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அந்த சட்டதிருத்தம் கூறுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றிய உலகளாவிய கவலைகளுக்கு எதிரொலியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது.

புதிய சட்டம் டீப்ஃபேக்குகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான தண்டனையை மேலும் கடுமையாக்கியுள்ளது. இது போன்ற டீப்ஃபேக் படங்கள் பொதுவெளியில் இயங்குபவர்கள் அதிகமாகப் பாதிக்கிறது. மார்ச் 2024 இல், நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஐந்து டீப்ஃபேக் வலைத்தளங்களில் கிட்டத்தட்ட 4000 பிரபலங்களின் ஆபாச டீப்ஃபேக் படங்கள் உள்ளன என்று தெரியவந்தது. அவர்களில் 255 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

AI தொழில்நுட்பம் அதிநவீனமாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அதன் பயன்பாடு எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கிறது. பிரிட்டன் கொண்டுவருவது போன்ற சட்டக் கட்டுப்பாடுகள் ஆன்லைனில் டீப்ஃபேக் ஆபாசப் படங்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும்.

i5 லேப்டாப் வாங்கணுமா? வெறும் ரூ.50,000 க்கு எக்கச்செக்க ஆப்ஷன்ஸ் இருக்கு!

click me!