இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ரிஷி சுனக் நான்காவது சுற்றில் 115 வாக்குகள் பெற்று மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஒவ்வொரு சுற்றிலும் ரிஷி சுனக் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ரிஷி சுனக் நான்காவது சுற்றில் 115 வாக்குகள் பெற்று மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஒவ்வொரு சுற்றிலும் ரிஷி சுனக் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
ரிஷி சுனக்குடன் மேலும் நான்கு பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இரண்டாம் இடத்தில் பென்னி மார்டவுன்ட் 82 வாக்குகளும், லிஸ் ட்ரஸ் 71 வாக்குகளும், கெமி படேனோச் 58 வாக்குகளும், டாம் துகெண்டாட் 31 வாக்குகளும் பெற்று இருந்தனர்.
நான்காவது சுற்றில் ரிஷி சுனக் முன்னிலையில் இருந்தாலும், இறுதிச் சுற்றுப் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்கள் வாக்குகள் செலுத்தினர். இருவர் தேர்வு செய்யப்படும் வரை இந்த தேர்தல் நடைபெறும், இறுதியில் இருவர் இருக்கும்போது, கட்சி உறுப்பினர்கள் பிரதமரை தேர்வு செய்வார்கள்.
கடந்த வாரம் வரை பென்னி மார்டவுன்ட்டுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. ஆனால், நேற்றைய பதிவில் இந்த செல்வாக்கு சரிந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும்போது, வேட்பாளர்களை வைத்து நேர்காணல் தொலைக்காட்சிகளில் நடத்துவது இங்கிலாந்தில் வழக்கம். இந்த நேர்காணலை கன்சர்வேடிவ் கட்சியினர் விரும்பவில்லை. இதுபோன்ற நேர்காணல் கட்சியின் செல்வாக்கை இழக்கச் செய்கிறது என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இடைக்கால பிரதமராக நீடிக்கும் போரிஸ் ஜான்சன் தனது பதவியை கடந்த ஜூலை 7 ஆம் தேதி ராஜினாமா செய்தார். செப்டம்பர் 5 ஆம் தேதி புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை போரிஸ் ஜான்சன்தான் இடைக்கால பிரதமராக நீடிப்பார். ரிஷி சுனக் பிரதமர் ஆவதை போரிஸ் ஜான்சன் விரும்பவில்லை. ரிஷி சுனக் தவிர யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு வரலாம் என்று தனது விருப்பத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.
தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் முன்பு வரி குறைத்தால், பொருட்களின் விலை குறைந்து, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டது. ஆனால், ஞாயிற்றுக் கிழமை நடந்த விவாதத்தில் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்கள் தங்களை ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக் கொண்டனர். இன்று ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.