பள்ளத்தில் விழுந்த குட்டி யானை... போராடி மயங்கிய தாய்! பின் நடந்ததை நீங்களே பாருங்கள்... வைரல் வீடியோ!

By manimegalai a  |  First Published Jul 18, 2022, 10:30 PM IST

தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் உண்டு என்பதை ஒவ்வொரு நாளும் சில விலங்குகள் நிரூபித்து வருகிறது. அப்படி தாய் பாசத்தை நிரூபிக்கும் விதமாக தற்போது யானையின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 


தாய்லாந்தில் தற்போது பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழையின் காரணமாக சாலைகள், காட்டு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக  காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட சாலைகள் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது அல்ல, சில நேரங்களில் இது போன்ற சேறு சகதிகளில் மிருகங்களும் மாட்டிக்கொள்கிறது. அந்த வகையில் தாய்லாந்தில் உயரமான வாய்க்காலில் சேறு காரணமாக யானை குட்டி ஒன்று தவறி விழுந்து தவித்த நிலையில் அதனை பத்திரமாக மீட்டுள்ளனர் மீட்பு படையினர்.

Tap to resize

Latest Videos

இந்த சம்பவம் நகோன் நயோக் மாகாணத்தில் உள்ள காவ் யாய் தேசிய பூங்கா, ராயல் ஹில் கோல்ஃப் மைதானம் பகுதியில் உள்ள மேன்ஹோலில் நடந்துள்ளது. ஒரு வயது மதிக்க தக்க யானை குட்டி அந்த பள்ளத்தில் விழுந்ததை அடுத்து, தாய் யானை குட்டியை வெளியே கொண்டு வர தன்னால் இயன்றவரை முயற்சி செய்தது. இருப்பினும், தொடர்ச்சியான மழை கொடியதாலும், சேறு காரணமாகவும் தாய் யானையின்அனைத்து முயற்சியும் வீணாக்கியது. 

மேலும் செய்திகள்: பணவீக்கத்தால் ஏற்பட்ட உச்சகட்ட அவலம்! மாட்டு சாணத்தை நாப்கினாக பயன்படுத்தும் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!
 

பின்னர் இது குறித்து அறிந்த வனவிலங்கு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து குட்டி யானையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். அதே நேரம் தாய் யானை தன்னுடைய குட்டியை ஏதேனும் செய்துவிடுவார்களோ என்கிற பயத்தில் அவர்களின் மீட்பு பணிக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதனை சமாளிப்பதற்கு மயக்க மருந்து செலுத்தியபோது அந்த யானை மயங்கி அந்த குழியிலேயே விழுந்தது.  பின்னர் கிரேன் மூலம் தாய் யானையை மீட்ட வனவிலங்கு மீட்பு குழுவினர் கார்டியோபுல்மோனரி புத்துயிர் (CPR) செய்து அதற்க்கு புத்துயிர் கொடுத்தனர்.

ஒரு வழியாக, குட்டி யானையும் பத்திரமாக பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோ இதோ...

 

What an ordeal & trauma for the mother and baby elephant ! Mother elephant fainted when she saw her baby trapped in the manhole. Deep gratitude to those unsung heroes who saved their lives and united them❤️ credits in the video pic.twitter.com/YGVUB1Yxr4

— Supriya Sahu IAS (@supriyasahuias)

 

click me!