59 சதவீதம் பெரும்பான்மை.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் போரிஸ் ஜான்சான்...!

By Kevin Kaarki  |  First Published Jun 7, 2022, 8:39 AM IST

2020 ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று கூறி, அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களே போர் கொடி தூக்கினர். இதன் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி சூழல் ஏற்பட்டது. 

நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் 211 வாக்குகளுடன் 59 சதவீத ஆதரவுடன் வெற்றி பெற்றார். கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றார். இதை அடுத்து 2020 ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. 

Latest Videos

undefined

எதிர்ப்பு அதிகரிப்பு:

இதை மீறும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் அலுவலக இல்லத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை அழைத்து விருந்து வைத்தார். இது பற்றிய தகவல்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் கிளம்பின. இந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் வகையில் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரி இருந்தார்.

இதை அடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் கணவர் பிலிப் இறுதி சடங்கின் போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்தில் கலந்து கொண்டனர். இந்த சம்பவமும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். சொந்த கட்சியினரே பிரதமருக்கு எதிராக கிளம்பியதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

59 சதவீத வாக்குகள்:

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த பெரும்பாலான எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதை அடுத்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 211 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்கு அளித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீதம் என்ற பெரும்பாலான வாக்குகளை பெற்றதை அடுத்து தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். 

click me!