உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா வசித்து வரும் பானி காலா இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெயில் காலக்கட்டம் நிறைவு பெற்ற உடன் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா தெரிவித்து இருக்கிறார்.
போராட்டம் நடத்துவதாக கூறி வன்முறையை ஏற்படுத்தியது போன்ற பல்வேறு பிரிச்சினைகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வழக்குகளில் கைதாவதை தவிர்க்கும் நோக்கில் இம்ரான் கான் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
undefined
ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி குவாசிர் ரஷித் விசாரணை செய்தார். விசாரணையை அடுத்து இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி இம்ரான் கானை ஜூன் 25 ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என தலைமை நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
வழக்குப் பதிவு:
இந்த நிலையில், நேற்று பேட்டி அளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா, இம்ரான் கான் மீது இரண்டு டஜனுக்கும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. போராட்டம் நடத்துவதாக வன்முறையை தூண்டியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் பெயில் நிறைவு பெற்றதும், அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
இம்ரான் கானை இஸ்லாமாபாத்திற்கு வரவேற்பதாக தெரிவித்து இருக்கும் ராணா, அவவருக்கு சட்டப்படி முழு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக தெரிவித்து இருக்கிறார். இதனிடையே உள்துறை அமைச்சர் ராணா சனவுல்லா வசித்து வரும் பானி காலா இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாகும் கூறப்படுகிறது.
ஆட்சி மாற்றம்:
பாகிஸ்தானில் சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்கு பின் அந்த நாட்டின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் பதவி ஏற்று இருக்கிறார். பாகிஸ்தானை ஆளும் ஷபாஸ் ஷெரிபுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின் போது வன்முறை தூண்டியதாகவே, இம்ரான் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.