பிரிட்டன் தேர்தலில் மீண்டும் ரிஷி சுனக் வெற்றி பெறுவாரா? என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு?

By Dhanalakshmi GFirst Published Jul 4, 2024, 2:08 PM IST
Highlights

பிரிட்டன் தேர்தல் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இன்று இரவு பத்து மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தேர்தல் இன்று காலை துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் எட்டு தமிழர்களும் போட்டியிடுகின்றனர். எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

கடந்த 14 ஆண்டுகளாக பிரிட்டனை கன்சர்வேடிவ் கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. தற்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் இந்த முறை தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் நடக்கும் முதல் தேர்தலாகும் இது. இன்று தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் நாளை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

France Election 2024: இம்மானுவேல் மக்ரோன் கட்சிக்கு படுதோல்வி? நாடாளுமன்றத்தை கைப்பற்றும் எதிர்க்கட்சி!!

இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சவேடிவ் கட்சி, கெயிர் ஸ்டார்மெரின் தொழிலாளர் கட்சி, எட் டாவேயின் லிபரல் டெமாக்ரடிக்ஸ் கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிட்டாலும், நேருக்கு நேர் மோதல் கன்சர்வேடிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்றே அங்கும் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சி ஆட்சியை அமைக்கும். அறுதி பெரும்பான்மை இல்லை என்றால், அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் கட்சிக்கு அழைப்பு விடப்படும். கூட்டணி கட்சி ஆட்சி அமையும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்று பிரதமராக  போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். (இடையில் போரிஸ் ஜான்சன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர் நீக்கப்பட்டு, ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார்). எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 எம்பிக்கள் வெற்றி பெற்று இருந்தனர். இந்த முறை அதிகமான இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த (பிரிட்டன் வாழ் இந்தியர்கள்) எட்டு பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த உமா குமரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், கவின் ஹரன், டெவினா பால், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன், நரணி குத்ரா ராஜன் ஆகி எட்டு பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

வியாழன் கிரகத்தில் தெரியும் வினோத வடிவங்கள்! என்னடா நடக்குது அங்க? நாசா கண்டுபிடித்த புதுத் தகவல்!

click me!