உகாண்டாவில் மலைப்பாதை வழியே பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
உகாண்டாவில் மலைப்பாதை வழியே பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா - பேல் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள மலைப்பாதை வழியே 25-க்கும் மேற்பட்டவர்களுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறிய பேருந்து மலைமுகட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே உகாண்டா நாட்டில் சரியான சாலைகள் இல்லாததாலும், வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.