விலங்குகளைக் கொல்வதற்கு எதிராக அம்மணப் போராட்டம் நடத்திய அம்மணிகள்...

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 11:12 AM IST
Highlights

தோல்பொருட்களுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்து விலங்கு நல ஆர்வல அம்மணிகள் அம்மணமாக தெருவில் படுத்து விநோதப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ‘அட ஒரு எட்டுபோய்ப் பார்த்துவிட்டு வரலாமே’ என்று வேஷ்டியை மடித்துக்கட்டி கிளம்பவேண்டாம். இது நடந்தது பார்சிலோனாவில்.


தோல்பொருட்களுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்து விலங்கு நல ஆர்வல அம்மணிகள் அம்மணமாக தெருவில் படுத்து விநோதப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ‘அட ஒரு எட்டுபோய்ப் பார்த்துவிட்டு வரலாமே’ என்று வேஷ்டியை மடித்துக்கட்டி கிளம்பவேண்டாம். இது நடந்தது பார்சிலோனாவில்.

உலக அளவில், 85 சதவீதமான தோல் பொருட்கள் அரியவகை விலங்குகளின் தோலில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. இதற்காக, விலங்குகளை கொல்லும் போக்கு மனிதர்களிடம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, விலங்குகளை பாதுகாக்கக்கோரி விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பார்சிலோனியாவில் செருப்பு முதல் அணியும் கோட் வரை அனைத்தும் தோல் பொருட்களால் செய்யப்படுகிறது. குறிப்பாக ஆடு, நரி மற்றும் அணில் குடும்பத்தைச் சேர்ந்த  மிங்க்ஸ் ஆகிய மிருகங்களில் தோல்களில் தயாரிக்கப்படும் கோட்களை பார்சிலோனிய மக்கள் அதிகம் விரும்புகின்றனர். 

எனவே, தோலுக்காக விலங்குகள் கொல்லப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று பார்சிலோனாவில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் நேற்று (17ம் தேதி) நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பார்சிலோனாவின் முக்கிய கடைவீதியில், 30க்கும் மேற்பட்ட விலங்குநல ஆர்வலர் நிர்வாணமாக ஒன்று கூடி, தங்கள் உடலில் ரத்தம் போன்ற வண்ணங்களை பூசிக்கொண்டு தரையில் படுத்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ’ஒரு கோட்டுக்காக எத்தனை உயிர்களை கொல்வீர்கள்..?’ என்று ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட வாசகம் அடங்கிய அட்டையை கையில் பிடித்திருந்தனர்.

click me!