குட்நியூஸ்... கொரோனாவை விரட்ட 2 புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 27, 2021, 6:01 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவில் உள்ள கியு.ஐ.எம்.ஆர்.பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ‘பெட்டைட்’ என்ற அமினோ அமிலங்களின் கலவையை அடிப்படையாக கொண்ட  2 புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிப்பட்டு, அதனை மக்களுக்கு செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பக்கவிளைவுகள் பெரிதாக இல்லாத, அதிக சக்தி வாய்ந்த கொரோனா மருந்தை கண்டறியும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள கியு.ஐ.எம்.ஆர்.பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ‘பெட்டைட்’ என்ற அமினோ அமிலங்களின் கலவையை அடிப்படையாக கொண்ட  2 புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துகள் கொரோனாவைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்பட உள்ளது. இதனை எடுத்துக் கொள்ளும் கொரோனா நோயாளிகளின் நோய் தீவிரம் அடையாது எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய மருந்துகள் பிரான்ஸ் நாட்டில் எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்த மருந்துகளின் ஆரம்ப கால முடிவுகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், நச்சு தன்மையற்ற மற்றும் லேசான பக்க விளைவுகளை மட்டுமே கொண்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமல்ல பிற கொரோனா மருந்துக்களை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்துவதப் போல் அல்லாமல் சாதாரணமாக அறை வெப்ப நிலையில் வைத்து சேமித்து வைக்கவும், எளிமையாக விநியோகிக்கவும் முடியும் என்பது கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது. முதல் மருந்து கொரோனா தடுப்பு மருந்து ஆகும், இது தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கும். இரண்டாவது மருந்து, ஏற்கனவே பாதிக்கப்பட்ட செல்களில் தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் என்றும் கூறப்படுகிறது. 

click me!