அமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்.. ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம்..

By Ezhilarasan BabuFirst Published May 24, 2021, 12:56 PM IST
Highlights

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் தங்கள் மன அழுத்தத்திலிருந்தும், பதற்றத்திலிருந்தும் விடுபடும் நோக்கில் பசுக்களை கட்டித் தழுவும் சிகிச்சையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு மணிநேர கட்டிப்பிடிப்புக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் தங்கள் மன அழுத்தத்திலிருந்தும், பதற்றத்திலிருந்தும் விடுபடும் நோக்கில் பசுக்களை கட்டித் தழுவும் சிகிச்சையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு மணிநேர கட்டிப்பிடிப்புக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று மிக தீவிரமாக உள்ளது. மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இந்த கொடிய வைரசுக்கு இழந்துவருகின்றனர். இந்த அசாதாரணமான நோய்த்தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிப்பது சிரமம் என்பதால், விலங்குகளைக் கட்டி அணைத்து அதில் ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். நெதர்லாந்து நாட்டில் மிகவும் பிரபலமான பசு கட்டிப்பிடிக்கும் சிகிச்சை, தற்போது அமெரிக்காவில் புகழ்பெற்று வருகிறது.  மக்கள் தங்கள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க பசுக்களை கட்டிபிடிக்கின்றனர். இந்த நோய்த் தொற்று காலத்தில் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் அதிக கவனம் செலுத்து வரும் நிலையில் இந்த பசு கட்டிப்பிடு சிகிச்சை பிரபலமடைந்து வருகிறது. பசுக்களை கட்டிபிடிப்பதன் மூலம் நேர்மறையான எண்ணத்தை உருவாவதுடன், உடலில் ஆக்ஸிடாஸின் அளவும் அதிகரிக்கிறது, 

பசுக்கலை கட்டித் தழுவி ஆறுதல் அடையும் பழக்கம் டச்சுக்காரர்களிடமிருந்து தோன்றிய பழக்கமாகும்.  தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளதால், தங்களது உற்றார் உறவினர், சொந்தபந்தங்களிடமிருந்து விலகி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.  எனவே பசுக்களை கட்டித்தழுவும் தொராபி  தற்போது அமெரிக்காவின் புகழ் பெறத் தொடங்கியுள்ளது. இந்த தெரபியின் மூலம் மனிதர்கள் மட்டும் இன்று  பசுக்களுக்கும் அது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது என கடந்த 2007-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசுவின் கழுத்து மற்றும் மேல் முதுகின் குறிப்பிட்ட பகுதிகளில் கைகளால் வருடி மசாஜ் செய்யும் போது அது பசுக்களுக்கு ஆழ்ந்த நிம்மதியை கொடுக்கிறது என குறிப்புகள் காட்டுகின்றன. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இது வணிகமாகவே மாறி இருக்கிறது. பசு கட்டிப்பிடி மையங்களை வைத்துள்ளவர்கள் ஒரு மணிநேர கட்டித்தழுவலுக்கு 200 ரூபாய் வசூலிக்கின்றனர். குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகளை போன்ற சிறிய செல்லப்பிராணிகளை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நிம்மதி மற்றும் மனநிறைவுகளை காட்டிலும் பசுவை கட்டித்தழுவுவதால், இருமடங்காக மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என இந்த தெராபியில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். 

மன நிம்மதிக்காக பசுக்களை கட்டித்தழுவும் இந்த சிகிச்சை முறை நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு இந்தியாவின் குருகிராமில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் பசுக்களை கட்டித்தழுவும் மையத்தை தொடங்கியுள்ளது. காமதேனு கவுதம் மற்றும் ஆரோக்கிய சன்ஸ்தான் என்ற அந்த அமைப்பு, கடுமையான பணிச் சூழல் மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் உழன்று கொண்டிருக்கும் மக்களை மன அழுத்தத்தில் இருந்து  மீட்கும் நோக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பசுவை கட்டிப்பிடிக்கும் இந்த சிகிச்சையில் பசுவை வளர்ப்பது மற்றும் மசாஜ் செய்வது, அதை ஆரத்தழுவி வருடுவது மற்றும் அதனுடன் உட்கார்ந்து கொள்வது, போன்றவை அடங்கும். தன்னிலை மறந்து பசுவை கட்டித்தழுவுவதன் மூலம் , அது அனைத்து மன சிக்கல்களிலுமிருந்து விடுவித்து, மனதை புத்துணர்ச்சியடைய செய்கிறது, பசுக்களை கட்டித்தழுவும் இந்த தெரபியின் மூலம் ரத்த அழுத்தம், முதுகெலும்பு வலி, இதய பிரச்சனை, மனச்சோர்வு மட்டுமல்லாமல் கவலை, பதற்றம் மற்றும் அனைத்து வகையான மன அழுத்தத்தில் இருந்தும் விடுவித்து குணப்படுத்துகிறது என ஏற்கனவே குருகிராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது. 
 

click me!