கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் தோன்றியது: அடித்து கூறும் மைக் பாம்பியோ..

By Ezhilarasan BabuFirst Published May 19, 2021, 5:01 PM IST
Highlights

அது வைரஸை பற்றிய புகார் செய்ய துணிந்த ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தி கைது செய்து சிறைப்படுத்தி அவர்களை மௌனிக்கச் செய்தது. அதேபோல் உலக சுகாதார அமைப்பையும் தனக்கு பிரச்சார செய்யும் ஒரு அமைப்பாகவே அது மாற்றியது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த வைரஸ் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வந்ததா என்ற கேள்விக்கு முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ஆம் என பதில்  அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் நடத்திய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு உலக நாடுகள் முதல் அலையில் இருந்து தப்பித்தாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதன் இரண்டாவது அலையில் சிக்கி சீரழிந்து வருகிறது. கொரோனா வைரஸ்  திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒரு வைரஸ் எனவும், அது சீனாவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர்  லு-மெங் யான் சமீபத்தில் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். இதே தகவல்களை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய நாட்டு பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது மீண்டும் சீனாவுக்கு எதிராக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த காலங்களில் சீனாவின் சதியே கொரோனா வைரஸ் தொற்று என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு பலமுறை குற்றம்சாட்டி வந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக டாக்டர்  லு-மெங் யான் தகவல் அமைந்துள்ளது. மூன்றாம் உலகப்போர் மூளும் நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளவும், உலகை வெற்றி கொள்ளும் பொருட்டும் ஒரு புதுமையான உயிரியல் ஆயுதத்தை சீனா உருவாக்கியுள்ளது என, தற்போது அமெரிக்காவிடம் சிக்கியது ஆவணங்கள் மூலம் சீனா அம்பலப்பட்டு நிற்கிறது. இது தற்போது ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையும் மீண்டும் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளரும், தி நியூயார்க் டைம்ஸின் முன்னாள் ஆசிரியருமான பாரி வெயிஸ், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோவுடன் நோர்காணல் ஒன்று நடத்தியுள்ளார். அதில்,  கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்தான் வந்ததா என எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோஆம் என பதில் அளித்துள்ளார். மேலும் அவர் அந்த நேர்காணலில், 

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என தான் நம்புவதாக கூறியுள்ளார், மேலும் அதற்கான ஆதாரங்களையும் அவர் விளக்குகிறார், இது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இது விவாதிக்கப்பட வேண்டும், குறிப்பாக வைராலஜி ஆய்வகங்கள் அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கண்காணிக்கப்படுகின்றன. வுஹானில் இருந்து கசிந்த இந்த வைரஸ் 3.4  மில்லியன் மக்களை பலிகொண்ட ஒரு வைரஸ். இதுகுறித்து தெரிவித்த முன்னாள் நியூயார்க் டைம்ஸ் நிருபர் டொனால்ட் மெக்நில், அந்த ஆய்வகங்களில் நுண்ணிய கசிவுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது எனவும், சரியாக என்ன தவறு நடந்தது என்பதை நாம் ஆராய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு காரணம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து முக்கியமான விஷயங்களை நாம் யூகிக்க முடியும், 

அது வைரஸை பற்றிய புகார் செய்ய துணிந்த ஊடகவியலாளர்களை சிறைப்படுத்தி கைது செய்து சிறைப்படுத்தி அவர்களை மௌனிக்கச் செய்தது. அதேபோல் உலக சுகாதார அமைப்பையும் தனக்கு பிரச்சார செய்யும் ஒரு அமைப்பாகவே அது மாற்றியது. சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர், தனது பதிவில் கொரோனா வைரஸ் தொடர்பான செய்தி வெளியிட்ட சீன ஊடகங்கள் முடக்கப்பட்டன எனக் கூறியுள்ளார். சீனாவில் வுஹானில் கொரோனா வைரஸ் தீவிரமடைய தொடங்கியபோது ஜங் ஜாக் என்ற சிட்டிசன் ஜெர்னலிஸ்ட் ஒருவர், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்றவற்றில் வீடியோ வெளியிட்டு வந்தார் அது கடந்தாண்டு மே மாதத்தில் அது அனைத்தும் முடக்கப்பட்டது, தொடர்ந்து பொய் செய்திகளை அவர் பரப்புகிறார் எனக்கூறி பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 

வைரஸ் வுஹானில் பரவியபோதும் சீனாவுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற முயற்சித்தோம், ஒவ்வொரு சிறு ஆதாரங்களையும் பயன்படுத்த முயன்றோம், ஆனால் சீனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அனைத்து தகவல்களையும் மறைத்தது. அங்கு நிலவிய ஒட்டுமொத்த சூழல்களையும் வைத்து பார்க்கும் போது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வந்ததுதான் என உறுதி செய்யமுடிகிறது. ஆனால் இது குறித்து எந்த தகவலும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்தது. தகவல்களை மறைக்க சீனா மேற்கொண்ட தீவிர முயற்சிகள், ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் தோன்றிய என்பதைத் தெரிவிக்கிறது.  மீண்டும் இதுபோன்ற ஒரு ஆபத்தை விளைவிக்கக்கூடிய சம்பவங்கள் சீன ஆய்வுக்கூடங்களில் நடக்க அதிக வாய்ப்புள்ளது. அல்லது சீனாவின் பிற ஆய்வுக்கூடங்களில் நிகழ வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

சீனா தொடர்ந்து தன்னுடைய திறனுக்கு பொருந்தாதவகையில் செயல்களைச் செய்து வருகிறது, இந்த பிராந்தியத்தில் இருந்து வெளியாகும் உயிராயுதம் மற்றும் பயோ தீவிரவாதம் ஒட்டுமொத்த உலகுக்கும் மிகவும் ஆபத்தானது என்பது உண்மையிலும் உண்மையாகும். இது எதிர்காலத்தில் என்ன மாதிரியான உயிரியல் போர் நடக்கும் என்பதை சான்றாக உள்ளது. இது உயிரியல் போர், ஒரு மாபெரும் பேரரசை கட்டி எழுப்புவதே சீனாவின் இலக்காக உள்ளது, அமெரிக்காவையும், மேற்கத்திய நாடுகளையும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும்  சீனாவிட் திட்டமே இது.  சீனா ஏன் உயர்கல்வி, ஹாலிவுட், வேளாண்மை போன்றவற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செல்வாக்கை செலுத்த விரும்புகிறது.? சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கா முழுவதும் நகர சபை கூட்டங்களில் கலந்து கொள்கிறது என மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார். 
 

click me!