சுனாமி எச்சரிக்கை...! கடலோர பகுதி மக்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..!

Published : Dec 05, 2018, 01:45 PM ISTUpdated : Dec 05, 2018, 02:02 PM IST
சுனாமி எச்சரிக்கை...!  கடலோர பகுதி மக்கள் வேறு இடத்திற்கு மாற்றம்..!

சுருக்கம்

தெற்கு பசிபிக்கின் நியு காலிடோனியாவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில்  7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போது அடுத்த ஒரு மணி நேரத்தில் சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  

நியு காலிடோனியாவின் லாயல்டி தீவில் இருந்து 155 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டு உள்ளதால் மூன்று மீட்டர் வரை உயரக்கூடிய அலை எழும்பும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

பூகம்பம் ஏற்பட்ட இந்த இடத்தில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை இதன் பாதிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நியு காலிடோனியாவின் லாயல்டி பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த ஒரு மணி நேரத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என  கூறப்பட்டு உள்ளது. அலைகள் மூன்று மீட்டர் வரை உயரும் என்பதால், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்