ஆண் காதலனுக்காக மனைவியை போட்டு தள்ளிய ஹோமோ செக்ஸ் கணவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் தண்டனை குறித்து விவரம் இன்று வெளியாகிறது.
ஆண் காதலனுக்காக மனைவியை போட்டு தள்ளிய ஹோமோ செக்ஸ் கணவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் தண்டனை குறித்து விவரம் இன்று வெளியாகிறது.
இங்கிலாந்தில் மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல் இருவரும் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவரது மனைவி ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகின்றனர். மெடிக்கல் ஷாப் அருகே அவென்யூவில் இவர்கள் வீடு இருக்கிறது.
இந்நிலையில் மே மாதம் 14-ம் ஜெசிகா வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது தெரிவந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து ஆராய தொடங்கினர்.
பின்னர் அவருடைய கணவர் தான் ஜெசிகாவை கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார். பிறகு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மிடேஷ் படேல் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்தது. ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்கான டேட்டிங் ஆப் மூலம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியரான, டாக்டர் அமித் படேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் மனைவி ஜெசிகாவை கொல்ல முடிவு செய்தார் மிஅடல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரை கொன்றுவிட்டு கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஆஸ்திரேலியா சென்று வாழ முடிவு செய்திருந்தார். அதன்படி சம்பவத்தன்று ஜெசிகாவின் கையை டேப் மூலம் கட்டினார். பின்னர் அதிகப்படியான இன்சுலினை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார். கொலைக்கான ஆதாரங்களை போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இந்த வழக்கில் மிடேஷ் படேல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. தண்டனை தொடர்பான விவரங்கள் இன்று வெளியாக உள்ளது.