
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களில் அமெரிக்கா விமானப்படையின் பங்களிப்பு மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் ஆதரவு இருக்கலாம் என்று தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற பட்சத்தில், கடினமான சூழ்நிலை உருவாகலாம் என அவர் எச்சரித்தார்.
இதுபற்றி பேசிய டிரம்ப், “ஐரோப்பிய நாடுகள் தரைப்படைகளை நிறுத்தத் தயார் நிலையில் உள்ளன. நாங்கள் விமான ஆதரவுடன் உதவத் தயாராக இருக்கிறோம். உள்ள வான்வழி உபகரணங்கள், ஆயுதங்கள் உலகின் வேறு எந்த நாட்டுக்கும் இல்லை” என்று கூறினார். ஆனால், அமெரிக்கத் தலைவர்கள் உக்ரைனில் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதி அளித்தார்.
அதோடு, உக்ரைன் நிச்சயம் நெட்டோவில் இணையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். உக்ரைன் நேட்டோவில் சேர்வதை ரஷ்யா ஏற்க மாட்டாது என்பதும், அது அவர்களின் நீண்டநாள் எதிர்ப்பு என்றும் டிரம்ப் நினைவூட்டினார். "பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை அடங்கும். இது ஒரு பிரச்சனை ஆகாது என நான் கருதுகிறேன். என்று நினைக்கிறேன்,” என்று டிரம்ப் கூறினார்.
மேலும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நேரடி உச்சிமாநாடு நடத்த முயற்சி செய்கிறேன் எனவும், அதன் பின் நான் இணையும் முத்தரப்பு சந்திப்பில் போருக்குப் பின் அமைதி காணப்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். “புதின் நல்லவராக நடந்துகொள்வார் என்பது உண்மை. இல்லையெனில் கடினமான சூழ்நிலையை தவிர்க்க முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால், சமாதானம் பெற உக்ரைன் சில நெகிழ்வுகளை காட்ட வேண்டும் என டிரம்ப் கூறினார். “உக்ரைன் தங்கள் இழந்த நிலப்பரப்புகளை எல்லாம் திரும்பப் பெற முடியாது. ஆனால் நிலத்தை விட்டுக்கொடுத்து, உயிர்களை காப்பாற்றும் நிலைக்கு வர வேண்டும்” என்றார். டான்பாஸ் பகுதியின் நிலையை எடுத்துக்காட்டிய அவர், “அந்தப் பகுதியில் சுமார் 79 சதவீதம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீட்டெடுக்க சக்தி போதுமானதாக இல்லை.
ரஷ்யா மிகப் பெரிய இராணுவ சக்தி கொண்ட நாடு” என்று வலியுறுத்தினார். "இறுதியில் உக்ரைன் மக்களின் உயிர்களை காப்பது முக்கியம். நிலத்தின் ஒரு பகுதியை இழந்தாலும், அமைதி கிடைத்தால் அது நல்ல முடிவு. போரின் காரணமாக மக்கள். கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும்” என டிரம்ப் தனது கருத்தை தெளிவுபடுத்தினார்.