தமக்கென்று சொந்த ஆப் ஒன்றை தொடங்கி உள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்.
வாஷிங்டன்: தமக்கென்று சொந்த ஆப் ஒன்றை தொடங்கி உள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்.
அரசியலில் கால் பதித்தவர்களில் சர்சசைகளில் சிக்காதவர்கள் என்று யாருமே கிடையாது. கடந்த காலங்களில் உலக அளவில் பெருமளவு உச்சரிக்கப்பட்ட பெயர் டிரம்ப். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்ற அவரை பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் அதிபர் தேர்தலில் தோற்று போனதால் மனம் போன போக்கில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வந்தார். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளினால் அவரது டுவிட்டர் கணகு முடக்கப்பட்டது.
இந் நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய டிரம்ப், தமது கருத்துகளை தெரிவிப்பதற்காக புதிய ஆப் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
இதற்கு ட்ரூத் சோஷியல்(truth social) என்று பெயர் வைத்துள்ளார். பீட்டா வெர்ஷனில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த ஆப் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.