எகிப்தில் இளைஞரின் வயிற்றில் இருந்த செல்போனை 2 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அகற்றினர்.
எகிப்தில் இளைஞரின் வயிற்றில் இருந்த செல்போனை 2 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அகற்றினர்.
வழக்கமாக குழந்தைகள் எதையாவது எடுத்து வாயில் வைத்து விளையாடி பின்னர் அதை விழுங்கி அட்ராசிட்டி காட்டுவார்கள். இது அடிக்கடி நடப்பது உண்டு.
ஆனால் இளைஞர் ஒருவர் சர்வசாதாரணமாக ஒரு செல்போனை முழுங்கிவிட்டு 6 மாதமாக கம்மென்று இருந்தால் பாருங்களேன். எகிப்தில் உள்ள அஸ்வன் மருத்துவமனைக்கு தீராத வயிற்று வலியுடன் வந்த இளைஞர் ஒருவர் கதறி துடித்து இருக்கிறார்.
பதறி, உதறி போன மருத்துவர்கள் உடனடியாக ஸ்கேன், எக்ஸ்ரே என இருக்கும் அனைத்துவித பரிசோதனைகளையும் செய்தனர். அதன் ரிசல்ட்டுகளை கையில் வைத்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
வயிற்றில் ஏதோ பெரியதாக செவ்வக வடிவில் இருந்திருக்கிறது. அது என்னவாக இருக்கும் யூகிக்க முடியாத நிலையில் கத்தியும், கையுமாக அந்த இளைஞருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை… ஆபரேஷன் சக்சஸ் ஆன நிலையில் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பொருளை கண்டு ஒரு செமத்தியாக அதிர்ந்து போயினர். காரணம்… அது ஒரு செல்போன்.
இது குறித்து அந்த இளைஞர் விழித்த பிறகு கேட்ட போது எப்போதே தெரியாமல் முழுங்கினேன், அது நடந்து ஒரு 6 மாதம் இருக்கும் என்று அசால்ட்டாக பதில் கூறி இருக்கிறார்.
இது போன்ற சம்பவங்கள் தங்களது மருத்துவமனையில் இதற்கு முன்பாக நடந்தது இல்லை என்று மருத்துவமனை முதல்வர் முகமது டாஷ்சவுரி, இது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது, எதற்காக அந்த செல்போனை விழுங்கினேன் என்ற விவரத்தை மறந்துவிட்டதாக இளைஞர் கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.