டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்!!

Published : Apr 17, 2025, 02:40 PM ISTUpdated : Apr 17, 2025, 03:01 PM IST
டிரம்ப் உத்தரவால்  ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல்!!

சுருக்கம்

சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை ஹார்வர்டு பல்கலைக்கழகம் இழக்க நேரிடும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்க அரசின் நிதியுதவி மற்றும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Trump threatens Harvard university: டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றங்களை செயல்படுத்தத் தவறினால், சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை ஹார்வர்டு பல்கலைக்கழகம் இழக்க நேரிடும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை:
ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்க அரசின்  நிதியுதவி மற்றும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, "சட்டவிரோத மற்றும் வன்முறை நடவடிக்கைகளில்" ஈடுபட்டதாகக் கூறி 2.7 மில்லியன் டாலர் மானியங்களும் திரும்பப் பெறப்பட்டன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க முடியாது:
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோம், வெளிநாட்டு மாணவர்கள் விசா வைத்திருப்பவர்களின் வன்முறை நடவடிக்கைகள் குறித்த பதிவுகளை ஏப்ரல் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் வரிக் கொள்கை குறித்த கவலைகளுக்கு மத்தியில் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் தொடர்ச்சியான ஆய்வின் ஒரு பகுதியாக இந்தக் கோரிக்கை உள்ளது. "மேலும், ஹார்வர்டு தனது அறிக்கையில் தேவைகளுக்கு முழுமையாக இணங்கா விட்டால், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் சலுகையை பல்கலைக்கழகம் இழக்கும்," என்று நோம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

H-1B விசா, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!H-1B விசா, கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!

பல்கலைக்கழக வளாகங்களில் ஆர்ப்பாட்டம்:
பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய நிதியுதவி குறைப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் பல்கலைக்கழகங்களை எச்சரித்துள்ளது. 2023 அக்டோபரில் ஹமாஸ் தலைமையிலான கொடிய தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களின் விசாக்கள் ரத்து:
கூடுதலாக, சில வெளிநாட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர் விசாக்களை ரத்து செய்துள்ளது. நிர்வாகம் கோரியபடி கொள்கை மாற்றங்களை செயல்படுத்தவும், வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கவும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மறுத்ததை அடுத்து மத்திய நிதியுதவி முடக்கப்பட்டது.

பல்கலைக்கழகத் தலைவர் ஆலன் கார்பர் எதிர்ப்பு:
பல்கலைக்கழகத் தலைவர் ஆலன் கார்பர் ஒரு அறிக்கையில், "எந்த அரசாங்கமும் - எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் - தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்க முடியும், யாரை அவர்கள் சேர்க்கலாம் மற்றும் பணியில் அமர்த்தலாம், எது படிக்கலாம் போன்றவற்றை ஆணையிடக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

ரகசிய வேலைகளில் இறங்கும் எலான் மஸ்க்; கடுப்பான டொனால்டு டிரம்ப்!ரகசிய வேலைகளில் இறங்கும் எலான் மஸ்க்; கடுப்பான டொனால்டு டிரம்ப்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்க அரசு கொடுக்கும் நிதி எவ்வளவு?
ஹார்வர்டு சுமார் 9 பில்லியன் டாலர் மத்திய நிதியுதவியிலிருந்து பெறுகிறது. இதில் பெரும்பாலானவை அதன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன, மீதமுள்ளவை புற்றுநோய், அல்சைமர் மற்றும் விண்வெளி அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி முயற்சிகளை ஆதரிக்கின்றன. ஹார்வர்டிடம் கணிசமான நிதி ஆதாரங்கள் இருந்தாலும், மற்ற பல்கலைக்கழகங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தேர்வு செய்துள்ளன. கொலம்பியா பல்கலைக்கழகம் விரைவில் தீர்வை எட்டும் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் நிதியுதவி நிதியுள்ள பல்கலைக்கழங்கள் எது?
இதற்கிடையில், கொலம்பியா, பிரின்ஸ்டன், பிரவுன், கார்னெல் மற்றும் நார்த்வெஸ்டர்ன் போன்ற நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நிதியுதவியை நிறுத்தியுள்ளது அல்லது திரும்பப் பெற்றுள்ளது, மேலும் பல்கலைக்கழகங்களுக்கு அவர்களின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) முயற்சிகள் மற்றும் திருநங்கை தொடர்பான கொள்கைகள் குறித்து எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!