பிரபல பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம், பொது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான சவூதி தூதருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம்: பிரபல பங்களாதேஷ் மாடல் மற்றும் நடிகையான மேக்னா ஆலம், டாக்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 9 அன்று, "பொது பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல்" விடுத்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மேக்னா ஆலம் தெரிவித்திருந்தார். திருமணமான ஒரு தூதருடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், சட்ட அமலாக்க முகவர் மூலம் அவர் தன்னை அச்சுறுத்துவதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்னா ஆலம் பங்களாதேஷின் பிரபல நடிகை மற்றும் மாடல் ஆவார். 2020 ஆம் ஆண்டு மிஸ் எர்த் பங்களாதேஷ் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றார். மிஸ் பங்களாதேஷ் அறக்கட்டளையின் தலைவராகவும் உள்ளார். அவரது கைது பங்களாதேஷில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது ஆனது அதிகார துஷ்பிரயோகம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
டெய்லி ஸ்டார் செய்தியின்படி, கைது செய்யப்படுவதற்கு முன்பு மேக்னா ஆலம் பல ஃபேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்திருந்தார். ஒரு வெளிநாட்டுத் தூதர் தன்னை அச்சுறுத்துவதாகக் கூறியிருந்தார். அந்தத் தூதர் திருமணமானவர் என்றும், தனக்கு அவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் மேக்னாவின் ஃபேஸ்புக் பதிவுகள் நீக்கப்பட்டன.
மேக்னாவின் தந்தை பதருல் ஆலம், ஒரு தூதருடன் மெக்னாவுக்குத் தொடர்பு இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார். டானின் செய்தியின்படி, மேக்னா ஆலம் டாக்காவில் உள்ள சவூதி தூதருடன் தொடர்பில் இருந்தார். "தூதருக்கும் மெக்னாவுக்கும் இடையே தொடர்பு இருந்தது. அவர் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். ஆனால் என் மகள் மறுத்துவிட்டார். தூதர் ஏற்கனவே திருமணமானவர், அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்" என்று அவர் கூறினார்.
புதன்கிழமை மாலையில் மேக்னா ஆலம் ஃபேஸ்புக் நேரலை வீடியோவில் தோன்றினார். காவல்துறை தனது வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறினார். மேக்னா ஆலமின் நேரலை 12 நிமிடங்களில் திடீரென முடிந்தது. மக்களிடம் உதவி கோரியும், ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மேக்னா தெரிவித்தார். பின்னர் அந்த வீடியோ ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது.
ஃபேஸ்புக் நேரலை வீடியோவால், பங்களாதேஷ் மாடல் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. அதிகாரிகள் 24 மணி நேரம் அவரது காவலை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வதந்திகள் பரவின. பிசினஸ் ஸ்டாண்டர்டின்படி, டாக்கா பெருநகரக் காவல்துறை பின்னர், "தூதரக உறவுகளில் தலையிடுதல் மற்றும் பொய்களைப் பரப்பி நாட்டிற்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுத்துவதாக மிரட்டல் விடுத்ததாக" மேக்னா ஆலமைக் காவலில் எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தியது.
விடாமுயற்சி லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய குட் பேட் அக்லி!