அமெரிக்க குடியுரிமை பெற 'கோல்டு கார்டு' திட்டம்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!

SG Balan   | ANI
Published : Feb 26, 2025, 04:33 PM ISTUpdated : Feb 26, 2025, 05:23 PM IST
அமெரிக்க குடியுரிமை பெற 'கோல்டு கார்டு' திட்டம்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!!

சுருக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பணக்கார வெளிநாட்டினருக்காக 'கோல்டு கார்டு' திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் 5 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையைப் பெறலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அமெரிக்கா பணக்கார வெளிநாட்டினருக்காக "கோல்டு கார்டு" ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பணக்கார வெளிநாட்டினர் அமெரிக்காவில் குடியேறி வாழவும் வேலை செய்யவும் முடியும்.

இந்த கோல்டு கார்டு குடியுரிமை பெற அமெரிக்க வணிகங்களில் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 43.54 கோடி) முதலீடு செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது கோல்டு கார்டுகளின் விற்பனை சுமார் இரண்டு வாரங்களில் தொடங்கும் என்றும், லட்சக்கணக்கான கோல்டு கார்டுகள் விற்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்த நடவடிக்கை சட்டப்படி முற்றிலும் சரியானது எனவும் அவர் கூறினார்.

டிரம்ப் எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போல் AI வீடியோ!

இந்த கோல்டு கார்டு தற்போதுள்ள EB-5 குடியேற்ற முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு மாற்றாக இருக்கும் என்று வெள்ளை மாளிகையின் வணிக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியுள்ளார். தற்போதுள்ள EB-5 விசா என்பது அமெரிக்க வணிகங்களில் குறைந்தது ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்குக் வழங்கப்படுகிறது. மேலும், இந்த விசா 35 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக்கூடியது.

"கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் பணக்காரர்களின் அடையாளம் நிச்சயமாக சரிபார்க்கப்படும். அவர்கள் அற்புதமான உலகத்தரம் வாய்ந்த குடிமக்களாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் வணிக செயலாளர் கூறியுள்ளார் என சிஎன்என் அறிக்கை தெரிவிக்கிறது.

புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அமெரிக்க வளைகுடாவின் வரைபடத்தையும் அதிபர் டிரம்ப் பாராட்டினார். "நான் அதைப் பார்த்து வியப்படைகிறேன்" என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தைக் கடுமையாகச் சாடினார். "அவர்கள் தீவிர இடதுசாரிகள் என்று நினைக்கிறேன். அவர்கள் மூன்றாம் தர நிருபர்கள் ... அவர்கள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை" என்று அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

டெஸ்லா பங்கு சரிவு: சந்தை மதிப்பு தொடர் சரிவால் கவலையில் எலான் மஸ்க்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Countries Without Trains: இந்த நாடுகளில் ரயிலே கிடையாது.. இந்தியாவின் அண்டை நாடு ஒன்றும் இந்த பட்டியலில் இருக்கு
Thailand Travel Rules: தாய்லாந்து போறீங்களா.? இந்தியர்களுக்கு புதிய விதிகள்.. இந்த ஆவணங்கள் ரொம்ப முக்கியம்