ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. கடந்த 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம் போட்டியிட்ட போது, அவருடன் இருந்த ரகசிய உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் பயங்கர தீவிபத்து... தீக்கிரையான துணிச்சந்தை... பல லட்ச மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!!
இது பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருக்க ஸ்டார்மிக்கு டொனால்டு டிரம்ப் ரூ.1.07 கோடி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்ட ரீதியிலான செலவு என்று கணக்கு கட்டப்பட்டது. இந்த சட்டவிரோத செயலுக்காக டிரம்ப் மீது தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஃபிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!!
இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதி முன்பாக டொனால்டு டிரம்ப் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.