பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்.. 9 ஆண்டுகளில் 1 முறை.! திடீர் சிக்கல் - பரபரப்பு

Published : Jun 26, 2023, 03:05 PM IST
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்.. 9 ஆண்டுகளில் 1 முறை.! திடீர் சிக்கல் - பரபரப்பு

சுருக்கம்

பிரதமர் மோடியிடம் சப்ரினா சித்திக் என்ற பெண் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதுக்கு பிறகு அவரை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது பெண் பத்திரிக்கையாளர் ஆன சப்ரினா சித்திக் என்பவர்,  இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் அவரது அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “நாம் ஒரு ஜனநாயக நாடு. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் நமது மரபணுவில் ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. ஜனநாயகம் என்பது நமது ஆன்மாவில் உள்ளது, நாம் அதில்தான் வாழ்கிறோம். அது நமது அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. எனவே ஜாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை. 

அதனால்தான், அனைவரின் நம்பிக்கையுடன் கூடிய ஒட்டுமொத்த வளர்ச்சியை நம்புகிறது, அதை முன்னெடுத்துச் செல்கிறது.இந்தியாவில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதற்கான அடிப்படை இவையே நமது அடிப்படைக் கோட்பாடுகள். என்று கூறினார். தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல்ஸ் பத்திரிகையில் பணிபுரியும் செய்தியாளர் சப்ரினா சித்திக், அமெரிக்காவில் 1986ம் ஆண்டு பிறந்தவர் ஆவர்.

இவரது தந்தை இந்திய - பாகிஸ்தானியர். இவரது தாயார் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தற்போது வெள்ளை மாளிகையில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்காக செய்தி சேகரிப்பாளராக இருக்கிறார். சப்ரினா சித்திக்கின் தந்தை ஒருங்கிணைந்த இந்தியாவில் பிறந்தாலும் வளர்ந்தது பாகிஸ்தானில் தான்.

அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

அதன்பிறகு பாகிஸ்தானை பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசிக்கின்றனர். அமெரிக்காவில் தான் சப்ரினா சித்திக் பிறந்து பத்திரிகையாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது.  தற்போது சிலர் சப்ரினா சித்திக்கை ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பத்திரிக்கையாளர் சப்ரினா சித்திக் யார் சார்பில் இந்த கேள்வியை கேட்டார். இடதுசாரிகள் சார்பில் அவர் கேட்டாரா? இல்லை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கேட்டரா? இல்லை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கேள்வி கேட்டாரா? என்று பலமுனையில் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இப்படி விமர்சனம் செய்வதா? என்ற கேள்வியும் மறுபுறம் எழுந்துள்ளது.

From the India Gate: நான் ரெடி.! 2026 தேர்தலுக்கு குறி வைக்கும் No.1 நடிகர்.. கலக்கத்தில் தலைவர்கள்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு