டோக்கியோ- ஹனேடா விமான நிலையத்தில் 2 விமானங்கள் தரையில் மோதல்! - ஒரு விமானத்தின் இறக்கை உடைந்தது!

By Dinesh TGFirst Published Jun 10, 2023, 2:03 PM IST
Highlights

ஜப்பான் தலைநகர், டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் புறப்படுவதற்காக ரன்வேயில் சென்றுகொண்டிருந்தத போது, வளைவில் அவை மோதியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு விமானத்தின் இறக்கை சிறு பகுதிகள் உடைந்து ரன்வேயில் விழுந்துள்ளது.
 

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் தரையில் மோதியதால் ஒரு ஓடுபாதை மூடப்பட்டது. சில விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ஜப்பானின் போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டின் பொது ஒளிபரப்பு அமைப்பான NHKஐ மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தைவானின் ஈவா ஏர்வேஸ் (2168.TW) மற்றும் தாய் ஏர்வேஸ் (THAI.BK) விமானங்கள் மோதி விப்பதுக்குள்ளானதாக ஜப்பான் நாட்டு உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன. விமான இறக்கையின் சிறு பகுதிகள் ஓடுபாதையில் விழுந்துள்ளதால் 4ரன்வேயில், ஒன்று மூடப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடனம் தாய் ஏர்வேஸ் அளித்த தகவலின் படி, பாங்காக் செல்லும் விமானம் ஒரு டாக்ஸிவேயில் புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தின் வலது இறக்கையின் முனையிலிருந்து ஒரு பகுதி, மற்றொரு டாக்ஸிவேயில் இருந்த தாய் நாட்டு ஈவா விமானத்தின் பின்புறத்தில் மோதியது.

இதில், தாய்லாந்து விமானத்தின் இறக்கை சேதமடைந்து சிறு சிறு பகுதிகள் ரன்வேயில் விழுந்தது. இதனால் விமானத்தை இயக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான  ஏர்பஸ் (AIR.PA) A330 விமானத்தில் 250 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர் என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானத்தில் தெரிந்த UFO.. வீட்டிற்கு பின்னால் நின்ற 10 அடி நபர்.. ஏலியன் பூமிக்கு வந்துவிட்டதா?
 

click me!