அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது புதிதாக 7 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை உறுதியானால், அவருக்கு 100 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
76 வயதாகும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக இருந்த அவர் தனது பதவிக்காலத்தின் முடிவில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை தூக்கிச் சென்றுவிட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அணு ஆயுதம் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவங்கள் அதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்? சிங்கப்பூர் அதிபர் போட்டியில் கவனம் ஈர்க்கும் தமிழர்!
அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் இதுகுறித்து விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதிபர் பதவியை இழந்த பின் 6 மாதங்கள் கழித்து தனியார் கிளப் ஒன்றில் நடந்த சந்திப்பில் வைத்து, டிரம்ப் இதனை தாமே தெரிவித்ததாக ஆடியோ ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அலமாரி ஒன்றில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் 49 பக்க குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ளது.
சிஐஏ, பென்டகன், என்ஐஏ உள்ளிட்டவை தொடர்பான கோப்புகள் டிரம்ப் வீட்டில் இருந்ததாகவும் குற்றப்பத்திரிக்கை சொல்கிறது. இதன் பேரில் மியாமி நீதிமன்றம் டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டுகள் தொடர்பான நகல் எதுவும் தங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் சொல்கிறார். டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமேசான் மழைக்காட்டில் விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!
தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் சொல்லியுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு இது கருப்பு தினம் என்று தெரிவித்திருக்கிறார். நான் ஒரு அப்பாவி என்று சொல்லிக்கொண்டிருக்கும் டிரம்ப், வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகும்போது கைது செய்யப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நாட்டுச் சட்டப்படி டொனால்டு டிரம்ப் அதிகபட்சம் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறக்கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றன. நாட்டின் அதிபராக ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பது அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டும்... எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு