லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் ஜப்பானிய கடற்கரை! அணுக்கழிவைக் கொட்டியது காரணமா?

By SG Balan  |  First Published Dec 10, 2023, 10:38 PM IST

ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேறியதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


வடக்கு ஜப்பானில் உள்ள கடற்கரையில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை அகற்ற அந்நாட்டு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை ஜப்பானின் வடக்கே பிரதான தீவான ஹொக்கைடோவில் உள்ள ஹகோடேட்டில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கின. சுமார் அரை மைல் நீளமுள்ள கடற்கரையில் உள்ளூர்வாசிகள் செத்து மிதந்த மீன்களைச் சேகரித்துச் சென்றனர்.

Latest Videos

undefined

இந்த மீன்களை உட்கொள்வது பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் செத்து மிதக்கும் மீன்களை பொதுமக்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மர்மமான சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் தெரியவில்லை. என்றாலும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வெளியேறியதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வாட்ஸ்அப் வாய்ஸ் மெமேஜிலும் 'வியூ ஒன்ஸ்' ஆப்ஷன் அறிமுகம்! பயன்படுத்துவது எப்படி?

【カメラマンから】
午前中、市や道による手作業での漂着イワシ回収作業が行われました。2日目です。昨日より大幅に気温が低下した影響か、臭いはそこまで酷く感じませんでした(N) pic.twitter.com/ulBjMbCGfi

— たまて函@【公式】北海道新聞函館報道部 (@tamate_doshin)

ஹகோடேட் மீன்வள ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் தகாஷி புஜியோகா, "இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், இங்கே நடப்பது இதுவே முதல் முறை" என்று தெரிவிக்கிறார்.

இந்த ஆண்டு அக்டோபரில், புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து இரண்டாவது முறையாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டது, இது சீனா மற்றும் பிற அண்டை நாடுகளால் கண்டிக்கப்பட்டது.

மார்ச் 2011 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு ஃபுகுஷிமா மின் நிலையம் உருக்குலைந்தது. அப்போதிருந்து அங்கு இருந்த 1.34 மில்லியன் டன் கழிவுநீரின் பகுதியை கடந்த ஆகஸ்ட் 24 முதல் பசிபிக் பகுதிக்குள் வெளியேற்றத் தொடங்கியது.

முதல் கட்டத்தில் 7,800 டன் கழிவுநீர் பசிபிக் பகுதியில் வெளியிடப்பட்டது. இதனால், ஜப்பானிய கடல் உணவு இறக்குமதிகள் அனைத்தையும் சீனா தடை செய்தது. ஜப்பான் இந்த நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தாது என்று வலியுறுத்தினாலும், ஜப்பான் கடலை சாக்கடை போல பயன்படுத்துவதாகவும் சீனா குற்றம் சாட்டியது.

நாய்க்குட்டியைக் தரையில் வீசி காலால் நசுக்கிக் கொன்ற நபர்!

click me!